மனிதன் இறந்த பிறகு மனிதனின் உடலில் நடக்கும் 5 அதிசய மாற்றம் என்ன தெரியுமா? நம‌க்கும் இப்படித்தான் நடகுமாம்!

0
3725

மனிதன் இறந்த பிறகு மனிதனின் உடலில் நடக்கும் 5 அதிசய மாற்றம் என்ன தெரியுமா?

2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்கள் இறந்தவர்களை புதைத்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வடக்கு ஸ்பெயினில் 350000 ஆண்டிற்கு முன் நடந்த சம்பவத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதுசரி உடல் மக்கிப் போகும் போது என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உடல் இறந்த பின் என்ன ஆகும் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? அறிந்து கொள்வோம் வாருங்கள்.

திசுக்கள் வெடித்து திறக்கும்

இறந்த சில நிமிடங்களில் மனித உடல் அழுக ஆரம்பிப்பதுடன் இதயத் துடிப்பு நின்றவுடன் உடல் குளிர்ந்த நிலைக்கு அதாவது ஆல்கோர் மோர்டிஸ் இற்கு சென்று உடலின் வெப்பநிலை 1.5 டிகிரி பாரன்ஹீட் ஆக மாறி ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அறையின் வெப்பநிலைக்கு மீள திரும்புபம் போது இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அமிலத்தன்மையை அதிகப்படுத்துவதனால் திசுக்கள் வெடித்து அதன் என்சைம்ஸ்களை வெளியிட்டு அவற்றை தன்னை தானே விழுங்கச் செய்யும்.

வெளிர் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறுதல்

இறந்தவுடன் முழு உடலும் வெளிர் நிறத்திற்கு மாறி இரத்த அணுக்கள் கனமாக தோன்றி அவை தரையின் பக்கமாக ஈர்க்கப்பட்டு இரத்த ஓட்டம் நின்றிருக்கும் இந்த சமயத்தில் உடம்பின் பின்பகுதியில் ஊதா நிறத்தில் புள்ளிகளும் படைகளும் அதாவது லிவர் மார்டிஸ் ஏற்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே உடம்பில் எப்போது உயிர் போயிற்று என்று மருத்துவர்கள் கணிக்கின்றார்கள்.

உடலை இறுகச் செய்யும் கால்சியம்

தசைகளை சுற்றி உள்ள மென்படலங்களில் உள்ள பம்ப் இறந்த பின்னர் செயலிழந்த கல்சியத்தை அதிக அளவில் பாயச் செய்து உடம்பில் உள்ள தசைகள் எல்லாம் இறுகிய நிலையில் வைக்கிறதனால் இறந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பின்னர் இறந்த உடல் இறுக்கமாகவும் அசைப்பதற்கு கடினமாகவும் அதாவது ரீகர் மார்டிஸ் ஆக மாறுகின்றதுடன் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதன் உச்சத்தையும் 48 மணி நேரத்தில் செயல் இழந்தும் போகின்றது.

தன்னைத் தானே செரித்துக் கொள்ளுதல்

கணையம் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றி உடல் தன்னையே அழித்துக் கொள்ள உதவுவதுடன் இதர நுண்கிருமிகள் இதனுடன் சேர்ந்து இந்த காரியத்தை விரைவுபடுத்துகின்றதனாலும் ரீகர் மோர்டிஸ் நிலை மெதுவாகவும் படிப்படியாகவும் இடம்பெறுவதனாலும் அது முடிவடையும் போது உடம்பு தன்னைத் தானே அழித்துக் கொள்ள தயாராகி விடுகிறது. இதனால் வயிற்றின் கீழ் உள்ள உடம்பு பச்சை நிறத்திற்கு மாறி விடுகின்றது.

மெழுகால் மூடப்படுவது

உடல் குளிர்ந்த மண் அல்லது குளிர்ந்த நீரை தொடர்பு கொண்டால் பாக்டீரியாக்களால் அடிப்போசியர் என்ற ஒரு மெழுகு பேன்ற கொழுப்பு மிக்க பொருள் உருவாக்கப்படுகின்றதுடன் இந்த படலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது. உடல் அழுகிய நிலையில் உடம்பின் எலும்பு மட்டும் மீதமாகின்றது.

ஆனால் சில உடல்கள் இந்த நிலைக்கு பதிலாக மெழுகால் மூடப்படுகின்றன என்ற வகையில் புதைக்கப்பட்டாலும் சரி எரிக்கப்பட்டு கரைக்கப்பட்டாலும் சரி நாம் இறுதி சடங்கிற்கு பின் மண்ணையே சென்று சேர்வதடன் எம்மில் சிலர் மெழுகாகவும் மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொங்கல் வைக்க உகந்த நேரம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 15.01.2019 செவ்வாய்க்கிழமை !