இரு வான்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: ஒருவர் பலி 16 பேர் காயம்!

0
352

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பட்டிபொல பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் கதிர்காமம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு வானும் கெப்பட்டிபொல சந்தியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு வான்களிலும் பயணித்த 17 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வான்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை… எதற்காக தெரியுமா?
Next articleசொந்த மகள்- வளர்ப்பு மகள் என பலரை கற்பழித்த கொடூர தந்தை!