இரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்! மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்!

0

நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். நோய்களே இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கை முறையை தான் கடைபிடிக்க வேண்டும். இயற்கை முறை என்றாலே ஆயுர்வேதம் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் கூறப்படும் பல கருத்துக்கள் காலம் காலமாக ஆரோக்கியமான சூழலை இந்த பூமிக்கு தந்து வருகிறது.

உணவு முறை, சுற்றுசுழல், வாழ்க்கை சூழல், அன்றாட பழக்க வழக்கங்கள் போன்றவற்றை முழுவதுமாக ஆயுர்வேதமாக மாற்றினால் மிக சுலபமாக நம்மால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், இதில் எவற்றையெல்லாம் செய்யவே கூடாது என்கிற பட்டியலும் உள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில் நாம் செய்ய கூடிய ஒரு சில விஷயங்கள் நமது ஆயுளை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகின்றனர். இரவில் நாம் செய்யும் எந்தெந்த செயல்கள் நமது ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

உணவு முறை

ஆயுர்வேதத்தின் படி சாப்பிடுவதற்கு என்று சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் உணவு சுழற்சி மாற்றப்பட்டு உடல் நலத்தை நேரடியாக பாதிக்கும்.

அத்துடன் இரவில் பின்பற்ற கூடிய சில தவறான வழிமுறைகள் தான் நமது மோசமான ஆரோக்கியத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

மாலைக்கு பின்

சூரியன் மறைந்த பின்னர், உப்பு அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்து வருவது நல்லது. ஏனெனில், இவை மாரடைப்பு, இதய நோய்கள், இரத்த அழுத்தம் முதலிய பாதிப்புகளை உண்டாக்கி சிறு வயதிலே மரணத்தை தரும்.

தயிர்

ஆயுர்வேதத்தில் மருத்துவ குணம் நிறைந்த உணவுகளில் தயிரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால் உடலில் பலவித பாதிப்புகள் ஏற்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், இவை கப்பா தோஷம் என்கிற ஒரு வகை தோஷத்தையும் ஏற்படுத்துமாம்.

புரதசத்து

இரவு நேரத்தில் உண்ணும் போது புரதம் அதிகம் கொண்ட உணவுகளை உண்டால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.

முக்கியமாக பருப்பு வகை உணவுகள், தனியா வகைகள் ஆகியவற்றை இரவு நேரத்தில் எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை தரும். கொழுப்பு உணவுகளை இரவில் தவிர்ப்பதே நல்லது.

காரசார உணவுகள்

இரவு நேரத்தில் காரசார உணவுகளை சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் என்றும், இதனால் உடல் வெது வெதுப்பு தன்மை அதிகரித்து உடல் எடை குறைய கூடும்.

எனவே, இலவங்கப்பட்டை, மிளகாய், வெந்தயம், சீரகம் போன்ற உணவு வகைகளை இரவு நேரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

சாலட்

ஆயுர்வேதப்படி இரவு நேரத்தில் நிச்சயம் சாலட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இது போன்ற வேக வைக்காத உணவுகளை சாப்பிட்டால் இரவில் வாயு தொல்லை அதிகரிக்க கூடும். இறுதியில் வயிற்று உப்பசமும் இதனால் உண்டாகும்.

நீர்

இரவு உணவு சாப்பிட்ட பிறகு அவசியம் அதிக அளவில் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரவு உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின்னரே சிறிது நீர் குடிக்கலாம்.

அதுவும் வெது வெதுப்பான நீர் அருந்துவது மிக சிறப்பு. அப்போது தான் செரிமான கோளாறுகள் உண்டாகாது. மேலும், மறுநாள் காலையில் மலச்சிக்கலும் ஏற்படாது.

மஞ்சள் பால்

இரவில் பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் பல்வேறு மாற்றங்கள் உடலில் உண்டாகும். முக்கியமாக சளியை கட்டுப்படுத்தும்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மஞ்சள் பால் உதவுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் பலருக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.

சர்க்கரை

இரவு நேரத்தில் சர்க்கரையை அதிக அளவில் சேர்த்து கொள்ள கூடாது. மிக முக்கியமாக கேக், பிஸ்கட், இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டுமாம்.

இல்லையேல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சளி தொல்லை, உடல் பருமன் போன்றவை ஏற்படுமாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களே! இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா?
Next articleபருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் !