இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு என்பவற்றை குணமாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !

0

அறிகுறிகள்: இரத்த அழுத்தம்.

தேவையானவை: அருகம்புல்.

செய்முறை: அருகம்புல்லை நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்: அதிகமான இரத்த அழுத்தம்.

தேவையானவை : சுண்டவத்தல்.அகத்தி கீரை.

செய்முறை: அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்: உடல் அதிக வெப்பம், அதிக இரத்த அழுத்தம்.

தேவையானவை: மாம்பழச்சாறு, பேரிக்காய் சாறு, கேரட் சாறு, ஆப்பிள் பழச்சாறு.

செய்முறை: மாம்பழச்சாறு, கேரட் சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் பேரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

அறிகுறிகள்: இரத்த அழுத்த நோய்.

தேவையானவை: சீரகம், ஏலக்காய், கருங்காலிப் பட்டை, சதகுப்பை.

செய்முறை: கருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை,ஏலக்காய்,சீரகம் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளஞ்சூட்டில் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதி அளவாக சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும்.

அறிகுறிகள்: இரத்த அழுத்தம்.

தேவையானவை: கோதுமை, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பாசிபயறு.

செய்முறை: முழு வெந்தயம் ஒரு கரண்டி , பாசிபயறு இரண்டு கரண்டி , கோதுமை இரண்டு கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை இரண்டு மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்: இரத்த அழுத்த நோய்.

தேவையானவை: ஆரைக் கீரை, சீரகம்.

செய்முறை: ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்: இரத்த அழுத்தம்.

தேவையானவை: எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, சீரகம், கரும்புச் சாறு.

செய்முறை: 100 கிராம் சீரகத்தை 200 மி.லி., கரும்புச் சாற்றில் கலந்து, பெரிய பாத்திரத்தில் வைத்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்க வேண்டும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் 100 மி.லி., எலுமிச்சைச் சாறு சேர்த்து, முன்னர்போல் பாத்திரத்தில் வைத்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு கிராம் அளவு காலையும் இரவும் உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.

அறிகுறிகள்: அதிக அளவு இரத்த அழுத்தம்.

தேவையானவை: எலுமிச்சை சாறு, மோர்.

செய்முறை : தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்: இரத்தத்தில் அதிக கொழுப்பு.

தேவையானவை: பூண்டு, சின்ன வெங்காயம், நெல்லிக்காய், சீரகம்,

செய்முறை: சீரகம், பூண்டு,நெல்லிக்காய்,சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடிபட்ட இடத்தில் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறைய இவற்றை சேர்த்து பற்று போட்டு வந்தால் குணம் கிடைக்கும் !
Next articleஇரத்த கொதிப்பு உள்ளவர்கள் இவற்றை செய்து பாருங்கள் பூரண பலன் கிடைக்கும் !