இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும் வல்லாரை!

0

கீரைகள் என்றாலே சத்துகள் நிறைந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் தினசரி உணவுகளில் கீரையை எடுத்துகொள்ளவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

கீரைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்குக்கு ஒவ்வொரு பயன் உள்ளது. ஆனால் வல்லாரை கீரையில் அனைத்து பயன்களுமே அடங்கியுள்ளன என்பது தான் ஆச்சரியம்.
இதன் காரணமாக தான் நோய்களுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்தில் வல்லாரை கீரைக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பயன்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது

* வல்லாரையை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் ஞாபக சக்தி மற்றும் அறிவு திறனை அதிகரிப்பதில் வல்லாரையை விட சிறந்த மருந்து எதுவுமில்லை.

* வல்லாரை கீரை இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக விலங்குகிறது. வல்லாரையை பொடியாக அரைத்து இட்லி,தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

* மேலும், தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய், பசி, தாகம், படை போன்றவற்றைக் குணப்படுத்தும். வல்லாரைக் கீரையையும் மிளகையும் சேர்த்துப் பச்சையாக மென்று தின்று வந்தால், உடல் சூடு தணியும்.

வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

* மாலைக்கண் நோயுள்ளவர்கள் வல்லாரைக்கீரையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அறைத்துகொள்ளவும். பின்னர் அதை வாயில் போட்டுப் பசும்பால் குடித்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடையலாம்.

* யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.

* வல்லாரை உண்ணும் காலங்களில் மாமிச உணவு, அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை உண்ணக் கூடாது. குறிப்பாக வல்லாரையுடன் புளி சேர்க்கக்கூடாது, இதனால் சுவை மட்டுமின்றி மருத்துவ குணமும் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழுப்பைக் குறைத்து ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் தடுத்து உதவும் கொத்தவரை!
Next articleதான விந்தணு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!