இரத்தசோகை, பலவீனம், சோர்வு, நெஞ்சு வலி, இதயம் படப்படப்பு,இரத்த சுத்தமின்மை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு ! இரத்தசோகை!

0
1656

அறிகுறிகள்: இரத்தசோகை, பலவீனம், சோர்வு.தேவையானவை: ஆப்பிள் பழச்சாறு, இஞ்சிச் சாறு, கேரட் சாறு. செய்முறை: ஒரு டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தமாகும். உடல் பலம் அதிகரிக்கும்

அறிகுறிகள்: இதயம் பலவீனமாக இருத்தல், நெஞ்சு வலி, சோர்வாக காணபடுதல், இதயம் படப்படப்பு, தேவையானவை: வெண் பூசணிக்காய், தேன். செய்முறை: வெண்பூசணிக்காயை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை மக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 30 மி.லி அளவுசாறை எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பி்ட்டு வந்தால் இதய பலமடையும். அதனுடன் ரத்தமும் சுத்தமாகும்.

அறிகுறிகள்: இரத்தம் சுத்தமில்லாமை. தேவையானவை: திருநீற்றுப் பச்சிலை விதை. செய்முறை: திருநீற்றுப் பச்சிலை விதைகளை, தண்ணீருடன் கலந்து அந்த‌ சாறை சிறு அளவில் ஒரு வாரம் சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: புகை பிடிப்பதினால் இரத்தம் மாசுபடுதல். தேவையானவை: முட்டைக்கோஸ் செய்முறை: தினதோறும் முட்டைக்கோஸை சமையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: சுத்தமில்லாத இரத்தம். தேவையானவை: தவசிக்கீரை, பாசிப்பயறு, செய்மு‌றை: தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

அறிகுறிகள்: சோர்வு, மறதி. தேவையானவை: வல்லாரை இலை. செய்முறை: வல்லாரை இலைகளை எடுத்து 1/2 லிட்டர் நீரிலிட்டு நன்றாக காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும்.

அறிகுறிகள்: சுத்த‌ம் இல்லாத‌ இர‌த்த‌ம். தேவையானவை: மிளகு, வேப்பிலை, அம்மான் பச்சரிசி. செய்முறை: அம்மான் பச்சரிசி கீரையுடன் மூன்று மிளகு, மூன்று வேப்பிலை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடடையும்.

அறிகுறிகள் : சுத்தம் இல்லாத இரத்தம். தேவையானவை: ஏலரிசி, அரைக்கீரை. செய்முறை : அரைக்கீரை சாறில் 1 கிராம் ஏல அரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

அறிகுறிகள்: இரத்தம் சுத்தமின்மை. தேவையானவை: திராட்சை பழம். செய்முறை: திராட்சை பழத்தை நன்கு கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: இரத்தம் சுத்தமின்மை. தேவையானவை: கரும்செம்பை இலை செய்முறை: கரும்செம்பை இலைகளை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் 10 மி.லி குடித்து வந்தால் மேகரோக கிருமிகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: பலவீனம், சோர்வு. தேவையானவை: ஆப்பிள் பழச்சாறு, செலரி தண்டு, துளசி இலைச்சாறு, கேரட் சாறு. செய்முறை: துளசி இலைச்சாறுடன் கேரட் சாறு மற்றும் ஆப்பிள் பழச்சாறு கலந்து மேலும் இதனுடன் மூன்று செலரி தண்டை எடுத்து அரைத்து அதன் சாறையும் ஒன்றாக கலந்து பருகி வந்தால் பலவீனம் குறைந்து இரத்தம் சுத்தமடையும்.

அறிகுறிகள்: இரத்தம் அசுத்தம் அடைதல், மது அருந்துதல், புகை பிடித்தல். தேவையானவை: எலுமிச்சை சாறு, தேன், இஞ்சிச் சாறு, செய்முறை: உணவு சாப்பிட்ட பிறகு சிறிது இஞ்சி சாறு, சிறிது எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு பருகி வந்தால், இரத்தம் தூய்மையாகும்.

அறிகுறிகள்: சோர்வு, பலவீனம். தேவையானவை: இசங்கு இலைச்சாறு. செய்முறை: இசங்கு இலையை சாறு எடுத்து லேசாக சூடாக்கி காலையும் மாலையும் 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: மாசு படிந்த இரத்தம். தேவையானவை: மிளகு, வெந்தயக் கீரை, வாழைப்பூ. செய்முறை: வெந்தயக் கீரையுடன் சிறிதளவு வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் இரத்தம் சுத்தமடையும்.

அறிகுறிகள்: இரத்தம் சுத்தமின்மை.தேவையானவை: புளியாரைக் கீரை, வேப்ப‌ இலை, மிளகு, மஞ்சள். செய்முறை: புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மூன்று மிளகு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

அறிகுறிகள்: இரத்தம் சுத்தமின்மை. தேவையானவை: அறுகம்புல் சாறு,கீழாநெல்லி. செய்முறை : அறுகம்புல் சாறுடன் கீழா நெல்லியை சேர்த்து அரைத்து பருகினால் இரத்தம் தூய்மையடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலனும கிழவியும்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kaalanum Kilavijum!
Next articleதெரு விளக்கு! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Theru Vilakku!