இரண்டு மனைவி யாருக்கு அமையும் தெரியுமா? ஜாதகம் பற்றிய விளக்கம்!

0
1913

லக்னாதிபதி அஸ்தங்கம் அடைத்து 7 ல் அமர்ந்து 7 ம் வீட்டோன் லக்கினத்துக்கு 8 , 6 ( அ ) 12 ல் அமர்ந்து ( மறைவு பெற்று ) சுபர்களின் பார்வை இல்லையெனில்

ஜாதகர் லக்னாதிபதி திசையில் 7 க்குடையவன் புத்தியில் இரண்டு தாரம் அமைத்து விடுகிறது.

7 ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி 6 , 8 , 12 ல் அமர்ந்து அவரை சுபகிரகம் பார்க்கவில்லையெனில் 7 ம் அதிபதி திசையில் இலக்கனாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கினாதிபதி லக்னத்திலும் 7 ம் அதிபதி 7 ல் ஆட்சி பெற்று இருவரில் ஒருவர் வக்கிரமாகி இருவரில் ஒருவர் திசை ஒருவர் புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு 2தாரம் அமைந்து விடுகிறது .

மேலும் பலவீனமடைந்த லக்கினாதிபதி அமர்ந்த வீட்டோன் 2 ம் வீட்டிலோ , ( அ ) 7 ம் வீட்டிலோ அமர்ந்து அந்த வீட்டாதிபதி அஸ்தங்கமாகவோ , நீசமாகவோ , வக்கிரமாகவோ , அமைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கினாதிபதி பலவீனம் அடைந்த மறைந்த ஜாதகத்தில் களத்திர ஸ்தானாமாகிய 7 ம் வீட்டில் பாவர்கள் நின்று 7 திசையில் லக்கினாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கனாதிபதி பலவீனம் அடைந்த ஜாதகத்தில் 2 ம் அதிபதியும் , 7 ம் அதிபதியும் பாதிக்கப்பட்ட ஜாதகனுக்கு தார தோஷம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது

7 ம் அதிபதி பாவருடன் கூடி 2 ம் வீட்டு அதிபதி 6 , 8 , 12 , ல் மறைந்து சுபகிரகங்களின் பார்வை அவர்களுக்கு இல்லாமல் இருந்து லக்கினாதிபதி பலவீனம் அடைந்து லக்கினத்துக்கு மறைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமையும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: