பட வாய்ப்புகள் தொடர்ந்து பறிபோவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிக் பாஸ் மீரா தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
மீரா மிதுன் ஏற்கனவே திருமணமானவர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது கணவர் குறித்து பேசியிருப்பார். ஐந்து வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது. இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். யார் அந்த நண்பர் என்பதையும் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பாபர்க்க படுகின்றது.