21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி.

0
3873

இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்து வரும் போது முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறுவதுடன், உடல் பளிச்சென மின்னுவதுடன் முகமும் உடலும் பொலிவு பெற்று மனமும் உற்சாகமடையும். மேலும் தோல் நோய்கள், தேவையற்ற முடிகள், தேமல், மற்றும் வியர்வை நாற்றம் போன்றனவற்றை நீக்கும்.

வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தருவதுடன், வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் அளிக்கின்றது.

தினமும் இதனை உபயோகித்து குளித்து வரும் போது பொதுவாக சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் காணப்படம் வரிகள், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் காணப்படும் பரு போன்ற சிறு கட்டிகளஎன்பன மறைந்துவிடும்.

பொருட்கள்:

• மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, ரோஜா இதழ்கள்

• பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல்

• சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள்

• வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை

• பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு

பாவனை முறை

பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கூட மிகவும் உகந்ததாக காணப்படுகின்ற இந்த இயற்கை குளியல் மாவானது மிகவும் ஏற்றது. இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து நன்கு பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வரும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும்.

குறிப்பு: இது ஒரு செலவு சிக்கனமான அழகு சாதனப் பொருளாகும். அதாவது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்த சோப்பிற்கு செலவிடும் பணத்தின் அளவினை விட இயற்கையான குளியல் மாவிற்கு செலவிடும் பணம் மிகவும் குறைவானதாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: