இப்படி ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் நடக்காதாம்!! நீங்களே செய்யலாம் பரிகாரம்!

0
732

ஜோதிடத்தில் திருமண தோஷம் இரண்டு வகையாக உள்ளது. அதாவது திருமணம் தேவையில்லை என்ற ஜாதக அமைப்பு மற்றும் திருமணம் தேவை இருந்தும் திருமணம் தடைபடும் ஜாதக அமைப்பு ஆகும்.

திருமணம் நடக்காத ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10-ம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என்று ஜோதிடம் கூறுகிறது.

இது போன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் அவர்களின் சிறுவயதில் இருந்தே காதல், திருமணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள்.

ஒரு சிலரின் ஜாதகத்தில் திருமண தோஷம் இருந்தாலும், அவர்களின் மனதில் திருமண ஆசை இருக்கும்.ஆனால் அவர்களுக்கு பெண் அமையாமல் அல்லது கிடைக்காமல் திருமண வயதிற்கு பின்பு கூட திருமணம் நடைபெறாமல் இருக்கும்.

திருமண தோஷம் நீங்க என்ன செய்யலாம்?

திருமணம் தோஷம் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள் அல்லது கணவரை இழந்த விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

இதனால் திருமண தோஷம் நிவர்த்தியாகி அவர்களின் வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: