Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 29.12.2021 Today Rasi Palan 29-12-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 29.12.2021 Today Rasi Palan 29-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
277

இன்று 09-11-2021 ஐப்பசி மாதம் 23ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். பஞ்சமி திதி பகல் 10.36 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் மாலை 04.59 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 04.59 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கந்தசஷ்டி விரதம். சூரசம்ஹாரம். இன்று முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் ராசிக்காரர்களே!

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம் ராசிக்காரர்களே!

இன்று பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகமின்றி காணப்படுவீர்கள். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.

கன்னி ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.

மகரம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

Previous article12 ராசிக்கும் சனி மற்றும் குருவால் 2022 புதிய வருடம் எப்படி இருக்கப் போகின்றது மகிழ்ச்சியின் உச்சம் தொட்டும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
Next articleமேஷம் முதல் கன்னி வரை பிறக்கப்போகும் 2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! புதிய வருடம் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது!