Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 15.12.2018 சனிக்கிழமை !

இன்றைய ராசிப்பலன் – 15.12.2018 சனிக்கிழமை !

0
2105

இன்றைய பஞ்சாங்கம்
15-12-2018, கார்த்திகை 29, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.13 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 01.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனமாக செயல்படுவது நல்லது.

கடகம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீட்டில் அமைதி நிலவும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.

மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.

மீனம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

Previous articleUllaallaa Song Lyrics tamil from Petta Song Lyrics
Next articleஇயற்கை முறையில் கருத்தடையை அடைய விரும்பும் தம்பதியர் இந்த முறைகளை செய்துபாருங்கள்!