Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 10.05.2019 Today rasi palan – 10.05.2019 !

இன்றைய ராசிப்பலன் – 10.05.2019 Today rasi palan – 10.05.2019 !

0
1600

இன்றைய பஞ்சாங்கம்
10-05-2019, சித்திரை 27, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 02.21 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 02.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30-09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் – 10.05.2019

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டார நட்பால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
இன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகலாம். குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சாதகப் பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள மந்த நிலை விலகும்.

கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்
இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

தனுசு
இன்று எதிர்பாராத பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் உள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

கும்பம்
இன்று உங்களுக்கிருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலை காணப்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

Previous articleஉங்கள் மகளை நான் கடத்த போகிறேன்! தல தோனியை மிரள வைத்த நடிகையின் அதிரடி ட்விட்!
Next articleகுனிந்து தொப்பையை தொட முடியவில்லையா! உயிரை பறிக்கும் இந்த நோயாகவும் இருக்கலாம்! 3 நிமிடம் ஜப்பானியர்களை பின்பற்றுங்கள்!