இன்றைய ராசிபலன் 9.7.2018 திங்கட்கிழமை !

0
885

இன்றைய ராசிபலன் 9.7.2018 திங்கட்கிழமை !

9.7.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 25-ம் நாள்.
ஏகாதசி திதி மாலை 5.50 வரை பிறகு கார்த்திகை நட்சத்திரம் இரவு 3.32 முதல். யோகம்: மரண-அமிர்த யோகம்.

குளிகை: 1:30 – 3:00
சூலம்: கிழக்கு.
பொது: ஸர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில் மாத்ரு பூதேஸ்வரர் பூஜை. திருவையாறு சிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. வேளூர் கிருத்திகை.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00

மேஷம் : சிக்கல்
ரிஷபம் : உதவி
மிதுனம் : நன்மை
கடகம் : சிரமம்
சிம்மம் : நிம்மதி
கன்னி : லாபம்
துலாம் : சுகம்
விருச்சிகம் : மேன்மை
தனுசு : வெற்றி
மகரம் : நற்செயல்
கும்பம் : ஆக்கம்
மீனம் : அன்பு

மேஷம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். உற்சாகமான நாள்.

ரிஷபம்: காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதி படுவீர்கள். சிலர் உங்களை விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நேரமிது.

மிதுனம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: