இன்றைய ராசிபலன் 7.7.2018 சனிக்கிழமை !!

0
643

இன்றைய ராசிபலன் 7.7.2018 சனிக்கிழமை !!

7.7.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 23-ம் நாள்.
தேய்பிறை நவமி திதி இரவு 8.27 வரை பிறகு தசமி. அஸ்வினி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 4.04 வரை பிறகு பரணி. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு, குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு அபிஷேகம் ஆராதனை. இன்று கெருட தரிசனம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : பிரச்னை
ரிஷபம் : வெல்வீர்
மிதுனம் : நட்பு
கடகம் : திட்டம்
சிம்மம் : மீட்பீர்
கன்னி : கவலை
துலாம் : தன்னம்பிக்கை
விருச்சிகம் : நன்மை
தனுசு : உயர்வு
மகரம் : காரியம்
கும்பம் : மகிழ்ச்சி
மீனம் : சிந்தனை

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் கோபப்ப டுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பி றந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தி னருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: சவால்கள், விவாத ங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: