இன்றைய ராசிபலன் 24.4.2018!

0
1001

இன்றைய ராசிபலன் 24.4.2018!

24.4.2018 செவ்வாய்க்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 11-ம் நாள்.
வளர்பிறை நவமி திதி பிற்பகல் 1.54 வரை பிறகு தசமி. ஆயில்ய நட்சத்திரம் மாலை 5.12 வரை பிறகு மகம். ஸ்ரீ வாஸவி ஜெயந்தி. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 12.00 – 1.30.
சூலம்: வடக்கு.
பொது: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திரப் பிரபையிலும் பவனி, மதுரை சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகனத்தில் திருவீதிவுலா.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9-10.30.
இராகு காலம் மாலை மணி 3-4.30.

மேஷம் : தன்னம்பிக்கை
ரிஷபம் : சந்தோஷம்
மிதுனம் : மகிழ்ச்சி
கடகம் : ஆதாயம்
சிம்மம் : தாழ்வு
கன்னி : காரியம்
துலாம் : செயல்
விருச்சிகம் : இன்பம்
தனுசு : மகிழ்ச்சி
மகரம் : வெல்வீர்
கும்பம் : உயர்வு
மீனம் : ஜெயம்

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கடகம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

துலாம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிட்டும். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

தனுசு: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: