இன்றைய ராசிபலன் 23.4.2018!

0
690

இன்றைய ராசிபலன் 23.4.2018!

23.4.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 10-ம் நாள்.
அஷ்டமி திதி. மாலை 4.06 வரை, பிறகு பூசம் நட்சத்திரம் மாலை 6.38 வரை, பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகம்: சித்த யோகம்.
குளிகை: 1.30 – 4.00
சூலம்: கிழக்கு.
பொது: மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி. வாஸ்துநாள் (காலை மணி.8.54 9.30) திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட சேவை. தியாகப்பிரம்மம் ஜனனம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 6.30 – 7.30, 4.30 – 5.30
எமகண்டம் காலை மணி 10.30 – 12.00.
இராகு காலம் காலை மணி 7.30 – 9.00.

மேஷம் : வரவு
ரிஷபம் : பக்தி
மிதுனம் : சுகம்
கடகம் : லாபம்
சிம்மம் : நலம்
கன்னி : நேசம்
துலாம் : தாமதம்
விருச்சிகம் : ஆதாயம்
தனுசு : வீம்பு
மகரம் : மேன்மை
கும்பம் : ஜெயம்
மீனம் : பாராட்டு

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்: மறைமுக விமர்சனங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போதும்,
சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணபேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதுமைகளை செய்துஎல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: