இன்றைய ராசிபலன் 22-09-2017

0
931

இன்றைய ராசிபலன் 22-09-2017

மேஷம்
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி. வீரதீரச்செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிவீர்கள். செல்வநிலை உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்
இன்று, குழந்தைகளோடு குழந்தையாய்க் கொண்டாடி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை ஆர்வம் கூடும். அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராகத் திகழ்வீர்கள்.

மிதுனம்
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களைக் கேட்டு கெடுபிடி செய்வர். தாயிடம் தர்க்கத்தைத் தவிர்த்து இனிமையாகப் பேசவும். பணிமாற்றம் ஏற்படலாம்.

கன்னி
பொதுவாழ்க்கை, தொழில் அல்லது வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழலாம். புகழ் ஓங்கும். பெரியோரைப் போற்றுவீர்கள். சொத்துச் சேரும்.

மகரம்
பணவரவால் மனம் பரவசப்படும். தாய், மனைவி போன்ற பெண்களால் இலாபம் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். புனித யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள்.

கடகம்
புத்திர பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் மேல் பிரியம் அதிகரிக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மகத்தானதாய் இருக்கும். பகைகள் விலகி, பண்புள்ள நண்பர்களின் சேர்க்கை ஏற்படும்.

சிம்மம்
ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாய் இருக்காது. மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களால் இழப்பு ஏற்படலாம்.

துலாம்
தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.

மீனம்
திருமண வாய்ப்புகள் உருவாகும். நல்ல மனைவி அமைவாள். மனைவி உல்லாசப் பயணம் செல்ல விரும்புவார். காரியங்கள் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் ஏற்படும்.

தனுசு
கல்விநிலை சிறக்கும். எந்த விஷயத்திலும் மனம் முழுமையாக ஈடுபடும். எப்போதும் விழிப்புடன் செயல்படுவீர்கள். பொதுவாழ்க்கை மற்றும் பயண ஆர்வம் ஏற்படும்.

விருச்சிகம்
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் வயல்களால் ஆதாயம் உண்டு. ஏமாற்றங்களும் ஏற்படலாம்.

கும்பம்
பெரியோர்களிடம் பணிவாய் நடந்தால் நல்லவன் என்ற பெயர் எடுக்கலாம். பிறருக்குத் தீங்கு செய்ய நினைக்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் தனவரவு குறையும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017
புரட்டாசி
6
நல்ல நேரம்
காலை: 6:00AM – 7:00AM
மாலை: 5:00PM – 6:00PM
இராகுகாலம்
காலை: 10:30AM – 12:00AM
இரவு: 1:30AM – 3:00AM
எமகண்டம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: