இன்றைய ராசிபலன் 21.10.2022 Today Rasi Palan 21-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 21-10-2022 ஐப்பசி மாதம் 04ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி மாலை 05.23 வரை பின்பு தேய்பிறை துவாதசி. இன்று மகம் நட்சத்திரம் பகல் 12.28 வரை பின்பு பூரம். இன்று மரணயோகம் பகல் 12.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை10.00-10.30, மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00.

மேஷ ராசிகாரர்களே!

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷப ராசிகாரர்களே!

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் உறவினர்களின் உதவியால் நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மிதுன ராசிகாரர்களே!

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனஅமைதி இருக்கும்.

கடக ராசிகாரர்களே!

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை சற்று குறையும்.

சிம்ம ராசிகாரர்களே!

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி ராசிகாரர்களே!

இன்று தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலா ராசிகாரர்களே!

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசிகாரர்களே!

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.

தனுசு ராசிகாரர்களே!

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.

மகர ராசிகாரர்களே!

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

கும்ப ராசிகாரர்களே!

இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உறவினர்களால் அனுகூலங்கள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.

மீன ராசிகாரர்களே!

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகத்தால் கிடைக்கப்போகும் பலன்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 22.10.2022 Today Rasi Palan 22-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!