இன்றைய ராசிபலன் 16.4.2018

0
512

இன்றைய ராசிபலன் 16.4.2018

16.4.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 3-ம் நாள்.
பிரதமை திதி. அமாவாசை காலை மணி 7.57 வரை, பிறகு அசுவினி நட்சத்திரம் அதிகாலை மணி 4.09 வரை, பிறகு பரணி நட்சத்திரம். யோகம்: சித்த யோகம்.
குளிகை: 1.30 – 4.00
சூலம்: கிழக்கு.
பொது: திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளிக் குதிரையில் புறப்பாடு. அமாசோம அரசமர பிரதட்சிணம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 6.30 – 7.30, 4.30 – 5.30.
எமகண்டம் காலை மணி 10.30 – 12.00.
இராகு காலம் காலை மணி 7.30 – 9.00.

மேஷம் : நன்மை
ரிஷபம் : லாபம்
மிதுனம் : அமைதி
கடகம் : சுறுசுறுப்பு
சிம்மம் : இன்பம்
கன்னி : நட்பு
துலாம் : நலம்
விருச்சிகம் : பகை
தனுசு : ஆர்வம்
மகரம் : பரிவு
கும்பம் : ஊக்கம்
மீனம் : பரிசு

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை ச்சுமையும், அலைச்சலும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர் கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கடகம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். புது வேலை அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்- அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇறந்தும் சிறுமி ஆஷிபாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அடக்கம் செய்ய இடம் தர மறுத்த கிராமத்தினரால் அதிர்ச்சி!
Next articleஎந்த ராசிக்காரர்களிடம் கெட்ட எண்ணம் அதிகம் உள்ளது?