இன்றைய ராசிபலன் 14.10.2022 Today Rasi Palan 14-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 14-10-2022 புரட்டாசி மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று பஞ்சமி திதி பின்இரவு 04.53 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. இன்று ரோகிணி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு மிருகசீரிஷம். இன்று மரணயோகம் இரவு 08.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று அம்மன் வழிபாடு நல்லது. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00.

மேஷ ராசிக்காரர்களுக்கு,

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை தோன்றும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு,

இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு பணப்பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடக ராசிக்காரர்களுக்கு,

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் சேரும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு,

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு,

இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலா ராசிக்காரர்களுக்கு,

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு,

இன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு,

இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

மகர ராசிக்காரர்களுக்கு,

இன்று அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மீன ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 29
Next articleMarch 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 01