இன்றைய ராசிபலன் 13.7.2018 வெள்ளிக்கிழமை!!

0
666

இன்றைய ராசிபலன் 13.7.2018 வெள்ளிக்கிழமை!!

13.7.2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 29-ம் நாள்.
வளர்பிறை அமாவாசை திதி காலை 9.21 வரை பிறகு பிரதமை. புனர்பூச நட்சத்திரம் இரவு 9.02 வரை பிறகு பூசம். யோகம்: சித்தயோகம் இரவு 9.02 வரை பிறகு மரணயோகம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்சவாரம்பம், தோளுக்கினியானில் பவனி. வில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.

மேஷம் : நம்பிக்கை
ரிஷபம் : திறமை
மிதுனம் : நிம்மதி
கடகம் : கவலை
சிம்மம் : அந்தஸ்து
கன்னி : வெற்றி
துலாம் : ஆசை
விருச்சிகம் : செலவு
தனுசு : ஆன்மிகம்
மகரம் : மகிழ்ச்சி
கும்பம் : பேச்சு
மீனம் : மகிழ்ச்சி

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

மிதுனம்: பிற்பகல் 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். பிற்பகல் 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: பிற்பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக் யமான விவாதங்கள் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பிற்பகல் 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.

மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: