இன்றைய ராசிபலன் 12.7.2018 வியாழக்கிழமை !

0
722

இன்றைய ராசிபலன் 12.7.2018 வியாழக்கிழமை !

12.7.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 28-ம் நாள்.
தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 11.45 வரை பிறகு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.40 வரை பிறகு புனர்பூசம். யோகம்: மரணயோகம் இரவு 10.40 வரை பிறகு அமிர்தயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் தெப்போற்சவ ஆரம்பம். மயிலம் முதல்பட்டம் பாலசித்தர் குருபூஜை.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : இன்பம்
ரிஷபம் : வாய்ப்பு
மிதுனம் : நாவடக்கம்
கடகம் : செலவு
சிம்மம் : திறமை
கன்னி : நட்பு
துலாம் : விவேகம்
விருச்சிகம் : நிதானம்
தனுசு : பிரார்த்தனை
மகரம் : சந்தோஷம்
கும்பம் : உயர்வு
மீனம் : மகிழ்ச்சி

மேஷம்

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்: வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

மீனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: