இன்றைய ராசிபலன் 11.7.2018 புதன்கிழமை !

0
681

இன்றைய ராசிபலன் 11.7.2018 புதன்கிழமை !

11.7.2018 புதன்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 27-ம் நாள்.
தேய்பிறை திரயோதசி திதி பிற்பகல் 2.02 வரை பிறகு சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மறுநாள் நள்ளிரவு 12.14 வரை பிறகு திருவாதிரை. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 10:30 – 12:00
சூலம்: வடக்கு.
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 6-7.30,9-10,1.30-3,4-5,7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.

மேஷம் : திருப்பம்
ரிஷபம் : நிம்மதி
மிதுனம் : ஈகோ
கடகம் : பாசம்
சிம்மம் : அறிவு
கன்னி : மேன்மை
துலாம் : ஆன்மிகம்
விருச்சிகம் : சங்கடம்
தனுசு : சிந்தனை
மகரம் : வெற்றி
கும்பம் : ஆதாயம்
மீனம் : வரவு

மேஷம்: துடிப்புடன் செ யல்படத் தொடங்குவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திட்டம் நிறைவேறும் நாள்.

ரிஷபம்: மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத் தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: