இன்றைய ராசிபலன் 10.4.2018!

0
578

இன்றைய ராசிபலன் 10.4.2018

10.4.2018 செவ்வாய்க்கிழமை ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 27-ம் நாள்.
தேய்பிறை தசமி திதி இன்று முழுவதும். திருவோண நட்சத்திரம் இரவு 10.45 வரை பிறகு அவிட்டம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 12.00 – 1.30
சூலம்: வடக்கு.
பொது: ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தரிசனம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு அருள்மிகு முத்தாட்சி அம்மன் ஆலயம் தீச்சட்டி திருவிழா, பாலையூர் முத்து மாரியம்மன் பொங்கல் திருவிழா.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.

மேஷம் : அனுகூலம்
ரிஷபம் : அத்யாயம்
மிதுனம் : சிக்கனம்
கடகம் : வெல்வீர்
சிம்மம் : ஆசி
கன்னி : நட்பு
துலாம் : திறமை
விருச்சிகம் : யோகம்
தனுசு : அனுபவம்
மகரம் : சந்தேகம்
கும்பம் : சோம்பல்
மீனம் : காரியம்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது பயம் வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கடகம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வளர்ப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்: சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: