இன்றைய நாளுக்கான ராசி பலன் 08.09.2017

0

இன்றைய நாளுக்கான ராசி பலன்
தேதி: வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017

மேஷம்
குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதிருந்தால் சுகமான நாள். இன்று ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி ஆகும்.

ரிஷபம்
நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். காசு, பணம் சேரும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நல்ல பலன்களாக நடக்கும்.

மிதுனம்
பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட, மனம் மகிழும்.

கன்னி
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும்.

மகரம்

உங்கள் திறமைகள் அதிகரிப்பதன் காரணமாக தனலாபமும் பெருகும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். மனத்தெம்பும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கடகம்
உங்கள் செல்வாக்கு கூடும். தெய்வ நம்பிக்கையால், கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

சிம்மம்
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.

துலாம்
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பலவழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.

மீனம்
புதிய உற்சாகம் பிறக்கும் பொன்னான நாள். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு
தாயின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். சிறு உபாதையானாலும் மருத்துவரை அணுகுங்கள். பயணங்களில் வசதிகள் குறையும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும்.

விருச்சிகம்
உங்கள் திறமைகள் அனைத்தையும் காட்டி செயல்பட்டாலும் அவமானமே மிஞ்சும். அக்கம் பக்கத்தாருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால், விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

கும்பம்
பணக் கஷ்டங்கள் அதிகமாக, மனக் கஷ்டங்களும் அதிகரிக்கும். எந்தவொரு மூலதனத் திட்டங்களிலும், தீர விசாரித்து முதலீடு செய்தால் இழப்பைத் தவிர்க்கலாம்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017
ஆவணி
23
முகூர்த்த நாள்
நல்ல நேரம்
காலை: 10:00AM – 10:30AM
மாலை: 5:00PM – 6:00PM
இராகுகாலம்
காலை: 10:30AM – 12:00AM
இரவு: 1:30AM – 3:00AM
எமகண்டம்
பகல்: 3:00PM – 9:00PM
இரவு: 9:00PM – 10:00PM

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகங்கனா ரணாவத் பகீர் தகவல்!! நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் கதி…
Next articleமனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலை.