இன்றுமுதல் இதன் நிலை? இலங்கை மக்களுக்கு திடீரென வந்த சோகச் செய்தி!

0

இலங்கையிலுள்ள அனைத்துக் கடைகளிலும் பாணின் விலை இன்றுமுதல் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று கூடியது.

இன்றைய கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தின்படி இதுவரை ஒரு இறாத்தல் பாண் 60 ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த நிலையில் இதன் புதிய விலை 65 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே கொத்து ரொட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும் வறிய குடும்பங்கள் உள்ளிட்ட ஏராளமான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக பாண் இருந்துவரும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியான புது தகவல்!கிளிநொச்சி படுகொலை செய்யபட்ட பெண்ணின் வாழ்வு இப்படி சீரழிய என்ன காரணம்!
Next articleஉங்களுக்கும் இப்படி நடக்கலாம்! யாழில் உறங்கிக்கொண்டிருந்தவருக்கு நள்ளிரவு நடந்த அதிர்ச்சி!