Home thatstamil one india tamil oneindia tamil இன்குபேட்டரில் வைக்கப்பட்ட 3 மாத குழந்தை நொடியில் நேர்ந்த சோகம் பதற வைக்கும் வீடியோ!

இன்குபேட்டரில் வைக்கப்பட்ட 3 மாத குழந்தை நொடியில் நேர்ந்த சோகம் பதற வைக்கும் வீடியோ!

0
911

பிரேசில் நாட்டில் மருத்துவமனை இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் பெலம் நகரில் உள்ள தனியார் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த மருத்துவமனையில், ராபர்யா ஜெசிகா என்ற இளம் தம்பதியினர், குறை மாதத்தில் பிறந்த 3 மாத பெண் குழந்தையை உடல்நல குறைபாடால் அட்மிட் செய்திருந்தனர்.

இந்நிலையில், குழந்தை ரபாடா தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைத்து கண்கணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், செவிலியர் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துவிட்டு, மற்றொரு கர்ப்பிணி தாயை கவனிக்க சென்றுள்ளார். அப்போது, குழந்தை காலை எட்டி உதைத்தது. இதில், இன்குபேட்டரின் சிறிய லாக் கழன்று, கதவு திறந்துகொண்டது. குழந்தை விழப்போவதைக் கண்ட செவிலியர் ஓடி வருவதற்குள், அடுத்த சில நொடிகளில் குப்புற கவிழ்ந்த குழந்தை, தரையில் விழுந்தது. இதனைக் கண்ட செவிலியர்கள் பதற்றத்துடன் குழந்தையை தூக்கி முதலுதவி அளித்தனர்.

எனினும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறிய மருத்துவர்கள், குழந்தையின் மண்டை ஓடு மற்றும் தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க, குழ்ந்தை இருந்த இன்குபேட்டரின் இரண்டு கதவுகளில், ஒருப்பக்கம் மட்டுமே செவிலியர் லாக் பண்ணியதாக குழந்தையின் தந்தை குற்றஞ்சாட்டிய நிலையில், மருத்துவமனை இதனை மறுக்கவே, பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, நீதிமன்றத்தின் உத்தரவால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleமூச்சுக் குழாயில் ஏற்படும் நோய்கள், இளநரை, ஆஸ்துமா, காசநோய், கண் எரிச்சல், ஆண்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் முசுமுசுக்கை கீரை !
Next articleட்ரம்ப்பின் முகநுால் பக்கத்தில் வைரலாகும் நாயின் புகைப்படம் !