இந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது! அவை என்ன தெரியுமா?
இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் ஆவார். சந்திர குப்தருக்கு மட்டுமின்றி சாணக்கியரின் அறிவுரைகள் அனைத்து மக்களுக்கும் உபயோகமானதும், பொதுவானதுமாகும்.
வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார். ஒருவர் வாழக்கையில் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாணக்கியர், என்ன செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அதன்படி உங்கள் வாழ்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் என்னென்னெ செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணம் எப்பொழுதும் கட்டுப்பாட்டின் அடையாளமாகும். எனவே உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளை தேவையில்லாத சூழ்நிலைகளில் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பணப்பிரச்சினைகளை அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.
உங்களது குரு உங்களுக்கு கூறிய அறிவுரையையோ அல்லது மந்திரத்தையோ ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புனித தன்மை வாய்ந்த இந்த மந்திரங்கள் பகிரப்படும் போது அதன் புனித தன்மையை இழப்பதோடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
அனைத்து குடும்பத்திலுமே உயர்ந்த குணங்கள், சில மோசமான குணங்கள், மோதல்கள் என அனைத்தும் இருக்கும். ஆனால் அவற்றை பொதுவெளியில் வெளியிடுவது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுறத்துவதோடு உங்களை கேலிக்கும் உள்ளாக்கும்.
ஞானமுள்ள மனிதன் எப்பொழுதும் தான் செய்த தானத்தையோ, நன்கொடையை பற்றியோ வெளியே கூறமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளால் மதிக்கப்படுவார்கள். ஆனால் தற்பெருமைக்காக இதனை வெளியே சொல்வதோ அல்லது பிறர் அறியும்படி செய்வதோ உங்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது.
வயதிற்கும் உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே யாரும் கேட்காத வரை உங்கள் வயதை வெளிப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனமான இளமை உணர்வை உணரும் வாய்ப்பின் மீது, உங்கள் மனம் அதிசயங்களை உண்டாக்கி அற்புத பலன்களை அளிக்கும்.
உங்களின் பா லி ய ல் வாழ்க்கை என்பது உங்களின் தனிப்பட்ட விஷயமாகும், அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள எந்த அவசியமும், உரிமையும் இல்லை. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூறும்போது மற்றவர்கள் உங்களை பற்றி எளிதில் எடை போட்டுவிடுவார்கள்.
ஒருவேளை நீங்கள் அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ பெரிய பொறுப்பிலே இருந்தால் அந்த அதிகார போதை உங்கள் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் நிலை கண்டு பொறாமை கொள்ளலாம், அதேபோல நீங்களும் உங்களின் தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகளை அதிகாரத்தின் மூலம் பணியில் திணிக்கக்கூடாது.
உங்களின் முட்டாள்த்தனத்தை எண்ணி எப்போதாவது நீங்களே சிரித்திருப்பீர்கள். அதனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதை வெளிய சொன்னால் மற்றவர்கள் இதனை பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்த நேரிடலாம். சிலசமயம் உங்களின் வருங்காலம் கூட இதனால் பாதிக்கப்படலாம்.