இந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்! இல்லையேல் பேரழிவு நிச்சயம்!
ஜோதிடத்தின்படி சில ராசிகள் எப்போதும் தங்கள் மனதிற்குள்ளேயே அனைத்து திட்டங்களையும் தீட்டி சிரித்துக் கொண்டே மற்றவர்களை வெற்றி பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தான் போட்டியில் தோற்கப்போகிறோம் என்று தெரிவதற்குள் இவர்கள் சாதூர்யமாகா வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சொந்த வேலையில் வெற்றி பெற மைண்ட் கேம் ஆடி வெற்றி பெற்று மற்றவர்களை தனது ஆதிக்கத்தால் கட்டுப்பாட்டில் வைக்கும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களை தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்வர் அதற்கான திட்டங்கள் தீட்டுவர். அதனால் இவர்கள் அபாயகரமானவர்கள், சூத்திரதாரி என்று கூறலாம். அதாவது சதித்திட்டங்கள் என்று கூட கூறலாம். இதனால் அதிக காலம் பழகிய உறவினர்கள், நண்பர்கள் கூட இவர்களின் இந்த போக்கைக் கண்டு எப்போதும் எச்சரிக்கையாகவும் ஒதுங்கியும் இருப்பார்கள்.
விருச்சிகம்: இந்த மைண்ட் கேம் ஆடுவதில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் விருச்சிக ராசியினர் தான். இவர்கள் தற்போது என்ன செய்ய வேண்டும் என முன்னரே யோசிக்கக்கூடியவர்கள். அதாவது அடுத்த கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று இப்போதே தெரிந்து கொண்ட தீவிர மனிதர்கள் எனலாம். தங்கள் சொந்த நலனுக்காக தங்களை சுற்றியுள்ளவர்களை எப்படி கையாள்வது, இவர்களின் வேலைக்காக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிந்து கொண்டவர்கள்.
ரிஷபம்: இவர்கள் காரியம் ஆக மற்றவர்கள் இவருக்காக வேலை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் உங்களுடன் பழகும் போது உங்களை தங்களின் வேலைக்கு பயன்படுத்த முதலில் சிறிதாக சோதிப்பார்கள். உங்களின் எதிர்வினையைக் கணக்கில் கொண்டு பின்னர் உங்களை பயன்படுத்த தயங்குவதில்லை.
சிம்மம்: இவர்களின் அடிப்படை குணமே மற்றவர்களை ஆட்சி செய்ய நினைப்பது தான். விருச்சிக ராசியினரைப் போலவே சிம்ம ராசியினர் தங்களின் சொந்த வேலைக்காக மைண்ட் கேம் ஆடக்கூடியவர்கள். எப்படியாவது உங்களின் மனதை மாற்றி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வைத்துவிடுவார்கள்.
கன்னி: புதனை ராசிநாதனாக கொண்ட புத்திசாலியினர் கன்னி ராசியினர் . இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் விஷயங்களில் அடுத்தடுத்த முன்னேற்றத்திற்காக சாதூர்யமாக செயல்பட்டு மற்றவர்களையும் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள வைப்பவர்களாக இருப்பார்கள்.
மேஷம்: மேஷ ராசியினர் நம்பிக்கையும், உற்சாகத்துடனும் ஆளுமை திறன் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மக்களை தங்கள் வேலைக்காக பயன்படுத்திக் கொள்ளவும் செய்வார்கள். மேஷம் நபரால் நீங்கள் கையாளப்படுவது கூட உங்களுக்கு புரியாது.
அதாவது வலிக்காத மாதிரி அடிக்கிறாண்டா என்று கூட சொல்லலாம். இவர்களை சதிகாரர் என்று கூட சொல்லலாம்.