இந்த 3 ராசியும் எச்சரிக்கையாக இருங்க ! 12 ராசியும் படிங்க! விபரீத ராஜயோம் யாருக்கு தெரியுமா?

0
1092

இந்த வாரம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரம். இந்த ஆண்டின் கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் வரப்போகிற ஏழு நாட்களும் சிறந்த நாளாக அமைய வேண்டும்.

அந்த வகையில் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும், சில ராசிக்கு சிக்கல் நிறைந்த வாரமாகவும் அமைந்துள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இந்த வாரம் யாரிடமும் சண்டை போடாதீங்க. உங்க மனசுல இருக்கும் கவலைகளை மனைவியிடம் கூறுங்கள். அவர்களை விட சிறந்த ஆறுதல் யாராகவும் இருக்க முடியாது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நாள் : சனிக்கிழமை

ரிஷபம்
இந்த வார தொடக்கத்துலயே சின்னதா சிக்கல் எழ வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு வேண்டாதவர்களிடம் இருந்து விலகி உஷாரா இருக்குறது நல்லது. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா நீங்க வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நாள் : புதன் கிழமை

மிதுனம்
போன வாரத்தை விட, இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். பொறுப்புகள் கூடும் வாரம். சுகர் பேஷண்ட் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நாள் : ஞாயிற்றுக்கிழமை

கடகம்
உங்களுடைய திறமையை பலருக்கு வெளிக்காட்டவும். கடந்த வாரத்தினை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. நீங்க ஒண்டிக்கட்டையா இருந்தா, கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்ச காலம் வெய்ட் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நாள் : செவ்வாய்க் கிழமை

சிம்மம்
கல்யாணம் ஆன தம்பதிங்களுக்கு இந்த வாரம் நல்லா இருக்கும். உங்களோட டேலண்ட்டை பாத்து மத்தவங்க பாராட்டுவாங்க. அதே சமயம் உங்களோட திறமையை சிலர் குறை சொன்னாலும் கூட, மெச்சுவாங்க. எதையும் நிறுத்திவிட எண்ண வேண்டாம். முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நாள் : சனிக்கிழமை

கன்னி
ரொம்ப நாளைக்கு பின்னாடி, வேலை வசதியாவும் பாதுகாப்பாவும் இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. அதனால உங்க தன்னம்பிக்கையும் டேலண்ட்டும் இன்னும் ஜாஸ்தியாகிடும். பண விஷயத்தைப் பொருத்த வரைக்கும், செலவழிக்கிறதை விட சேமிச்சி வைக்கிறது தான் உங்களோட திறமை. அதனால பணத்தை சம்பாதிக்க பல சான்ஸஸ் இருக்கு. சில முக்கியமான வேலையை முடிக்க முடியாம சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

துலாம்
யாருக்காவது கடன் கொடுத்திருந்தீங்கன்னா, அது இந்த வாரம் திரும்ப வந்திடும். நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளிலும் நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஜெயிக்க வாய்ப்பிருக்குது. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பிருக்குது. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நாள் : திங்கள் கிழமை

விருச்சிகம்
இந்த வாரம் முழுக்க ரொம்ப பரபரப்பா இருப்பீங்க. சிலருக்கு தான தர்மம் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். பிசினஸ் பண்றவங்க, ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, புது ஆர்டர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கும். அவசரப்பட்டு எதையும் பண்றது நல்லதில்லை. உங்களோட கேரக்டரை கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

தனுசு
இந்த வாரம் பணத்தைப் பத்தின கவலை உங்களை ரொம்பவே வாட்டி வதைக்கலாம். எதையும் முயற்சி எடுத்து செஞ்சா ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும். அவசரத் தேவையை பூர்த்தி செய்யுறதுக்கு வெளியில கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீல வானம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நாள் : வியாழக் கிழமை

மகரம்
வீட்டு பிரச்சனையை தீக்குறதுக்கு பெரியவங்க கூட உக்காந்து பேசுனீங்கன்னா பிரச்சனை தீருறதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் பொது நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக்க வாய்ப்பிருக்கும். லவ்வர் கூட பேசும் போது கவனமா பேசுறது நல்லது. இந்த வார கடைசியில வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். இதனால ரொம்பவே டையர்டு ஆகிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நாள் : திங்கள் கிழமை

கும்பம்
கல்யாணமான தம்பதிங்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நல்லதா இல்லை. இந்த வாரம் ஒரு விலை உயர்ந்த பொருள் ஒண்ணு உங்க கைக்கு வந்து சேர வாய்ப்பிருக்கும். வெளியூர் பிரயாணத்தை தவிர்க்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நாள் : ஞாயிற்றுக் கிழமை

மீனம்
இந்த வாரம் பெர்சனல் லைஃப்லயும் பிசினஸிலும் பல நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. வீட்டுல சுப நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம். அதனால வீட்டுல சந்தோஷம் பொங்கும். குடும்பத்துலயும் எல்லோருமே சந்தோஷமா அன்பா இருப்பாங்க. கல்யாணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரண் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. உங்க ஹெல்த் கண்டிஷனம் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நாள் : வியாழக் கிழமை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுடைய இரத்தத்தில் அதிக கொழுப்பு இருக்கா ! இவற்றை அரைத்து உணவுடன் சாப்பிடுங்க! கொழுப்பைக் குறைக்கும் 24 உணவு வகைகள்!
Next articleதீவை விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கும் நித்யானந்தா! வெளியான பரபரப்பு தகவல்!