இந்த வருடம் அதிகமான ஊதிய உயர்வு எந்த ராசிக்கு தெரியுமா?.

0
1152

அலுவலகங்களில் எல்லாம் வருடக்கணக்கினை முடித்திருப்பார்கள். அங்கு பணியாற்றுபவர்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியான நேரம் என்று கூட சொல்லலாம். ஒரு வருடம் நீங்கள் சிரமப்பட்டு வேலை பார்த்ததற்கு கிடைக்கப்போகிற பாராட்டு, ஊதிய உயர்வு எல்லாம் இந்த மாதத்தில் தான் நடக்கப் போகிறது.

எப்போதும் பரபரப்பாக இல்லையென்றால் இந்த ஒரு வாரமாவது பரபரப்பாக வேலை பார்ப்பார்கள். ஏமாற்றங்களை சுமந்து என் உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்று வருத்தப்பட்டு புலம்புவதை விட உங்கள் ராசிக்கு தகுந்த படி இந்த மாதம் அப்ரைசல் எப்படி அமையும் என்பதை உங்கள் ராசிப்படி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :
இந்த மாதம் உங்களுக்கு அதிகமான பண வரவு எல்லாம் இருக்காது. நெருக்கடியான சூழலில் தான் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும், பதவியுயர்வு கிடைக்கும்.

ஏஜண்ட் அல்லது நீங்கள் டீல் செய்யக்கூடிய மிடில் மேனிடத்தில் சற்று கவனமாக இருக்கவும். பணம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் சற்று கவனமாக கையாள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ரிஷபம் :
இந்த ஆண்டு உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். வேலையை சற்று கூடுதல் சுமையாகவே உங்களுக்கு இருக்கும். அதனை கையாள்வதில் ஏகப்பட்ட சிக்கலை சந்திப்பீர்கள். உங்களுக்கு உதவுவதாக சொன்ன நபர்கள் கைவிட்டுப் போகலாம்.

கடன் வாங்குவதோ அல்லது லோன் வாங்கி செலவுகளைச் செய்வதோ தவிர்த்திடுங்கள்.

மிதுனம் :
இவர்களுக்கு நல்ல அப்ரைசல் கிடைத்திடும். அதுவரை எதிரியாக நீங்கள் பாவித்த நபர் இந்த முறை உங்களுக்கு உதவியுடன் நீங்கள் வேண்டியது கிடைக்கும். இந்த முறை உங்களைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும், அதை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான வேலை உங்களிடம் இருக்கிறது.

சரியான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளினால் எதிர்ப்பார்த்த நன்மைகள் உண்டு.

கடகம் :
நீங்கள் பணியாற்றும் இடம், பணியாற்றுமிடத்தில் இருக்கும் நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ப சிறந்த பலன்கள் நிச்சயம் உண்டு. அப்ரைசலை பொருத்தவரையில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ஆனால் உங்கள் வாய்ப்புகளை தட்டிப்பறிக்க பலர் முண்டியடித்து வருவார்கள் அவர்களிடமிருந்து உங்கள் வாய்ப்பினை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

சிம்மம் :
பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகம் இருக்கும். நீங்கள் செய்யும் வேலைக்கு, கடந்த ஒரு வருடமாக நீங்கள் மேற்கொண்ட வேலைக்கு மிகச்சிறந்த பலனாக உங்களுக்கு அப்ரைசல் கிடைத்திடும்.சின்ன சின்ன வெற்றிகள், அல்லது குறுகிய கால வேலைகளுக்கு ஆசைப்பட்டு போனால் உங்களது மிகப்பெரிய வெற்றியை இழந்து விடுவீர்கள்.

இந்த வருடம் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் தரப்போகிறது என்பதால் தாமதமானாலும் காத்திருங்கள்.

கன்னி :
பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிலையான வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களது எதிர்காலத் தேவைகள், திட்டங்கள் எல்லாம் என்ன என்று மீண்டும் மறுபரிசீலனை செய்து அதனை மறுபடியும் துவங்குவது அவசியமாகும்.

அதற்காக புதிய புதிய திட்டங்களை ஆரம்பிக்காதீர்கள். புதிய வேலைக்குச் சென்றால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து செல்லும் வேலை நிலைக்காது.

துலாம் :
உங்கள் ராசிப்படி இந்த வருடம் பணவரவு, செலவு எல்லாமே முழுதாக மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதற்கேற்றபடி செலவுகளும் அதிகரிக்கும். உங்களது கடின உழைப்பு ஒவ்வொன்றும் வீண் போகாமல் நல்ல பலனைத் தேடித்தரும்.

பணத்தை கண்மூடித்தனமாக செலவழிப்பதிலோ வருங்கால சேமிப்புகளில் சேமிப்பதோ கவனம் செலுத்தாமல் பணம் வரும் வழியை ஆராய்ந்தால் நல்ல பலன் உண்டு.

விருச்சிகம் :
இந்த வருடம் மிகப்பெரிய மாற்றமெல்லாம் ஒன்றும் இருக்காது. இந்த ஆண்டு பணியாற்றுமிடத்தில் பணியில் ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடும், அவற்றை நீங்கள் கவனத்துடன் கையாள வேண்டும்.

இவற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை கையாள்வதில் தான் இருக்கிறது. அலுவலக நண்பர்களிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நிகழ்வதை முடிந்தளவு தவிர்த்திடுங்கள்.

தனுசு :
வேலையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எதிர்ப்பார்த்த பாராட்டு கிடைக்காது. இந்த மாதம் உங்களது பேச்சு, உங்களுடைய வார்த்தைகள் உங்களுக்கு எதிரியாக வந்து விடியும். பேசும் போதோ விவாதிக்கும் போது சற்று நிதானமாக இருங்கள்.

மகரம் :
ராசிப்படி உங்களுக்கு மனநிறைவான வேலை அமையாது, அதாவது இந்த வருடம் எதிர்ப்பார்த்த பணவரவு இருக்காது. என் வேலையை அங்கீகரிக்கவில்லை, என் கடின உழைப்பினை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் வீணானது என்று மிகவும் சோர்ந்து போவீர்கள்.

அப்படியே நினைத்துக் கொண்டு முடங்கிப் போகாமல் உங்களது வேலையில் கவனம் செலுத்துங்கள் இன்னும் தீவிரமாக உழைக்க ஆரம்பியுங்கள். சில மாதங்களிலேயே நல்ல பலன் கிடைத்திடும்.

கும்பம் :
இந்த மாதம் மட்டும் சிறிது சிரமமானதாக தோன்றலாம். அப்ரைசல் ஓரளவுக்கு நிறைவைத் தரும், இதைவிட சிறந்தது என்று தேடிச் செல்லாமல் இதையே தொடர்ந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

அலுவலகத்தில் நடைபெறுகிற அரசியலில் உங்கள் பெயர் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், முக்கியமாக அவற்றில் தலையிடாமல் இருப்பதும், அதை தவிர்ப்பதும் உங்களது வேலைக்கு நல்லது.

மீனம் :
ஒவ்வொரு நாளும் உந்தித்தள்ளவேண்டிய காலச் சூழ்நிலையில் இருக்கிறீர்கள். வேலை விஷயத்தில் மிக நெருக்கடியான முடிவினை எடுக்க வேண்டிய நிலை வரலாம். உங்களுக்கு அப்ரைசலாக கொடுக்கப்பட்டதில் திருப்தி இருக்காது. உங்களது வாதத்தினால் கிடைக்கிறதும் தூரப்போகும் என்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: