இந்த ராசி பட்டியலில் உங்களுடையதும் இருக்கிறதா?
தீபாவளி ஆண்டின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது இந்துக்களால் மட்டுமல்ல, சீக்கியம், ஜைனம் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் அன்புடன் கொண்டாடப்படுகிறது. லக்ஷ்மி தேவி நம் இல்லங்களுக்குச் சென்று செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் அன்புடன் நம்மை ஆசீர்வதிக்கும் இரவு இது. இந்த தீபாவளியில் லக்ஷ்மி தேவியின் அருளை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த தீபாவளிக்கு பின் பிரகாசமான எதிர்காலம் இருக்கும். தீபாவளி வாரத்தில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். வாரத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு நீங்கள் சில பெரிய சாதனைகளைச் செய்வீர்கள். நீங்கள் எதிர்கொண்டிருந்த பதற்றத்திலிருந்து இனி விடுபடுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்களே நீங்கள் பெரிய லாபம் பெறபோகிறீர்கள். உங்களின் எதிர்காலத்திற்காக உண்மையிலேயே நீங்கள் முயற்சி செய்யத் தொடங்குவதோடு இனி நீங்கள் மனரீதியாக வலுவாக இருப்பீர்கள். உங்கள் முயற்சி உண்மையில் அளவற்ற பலன்களை அளிக்கப்போகிறது. மேலும் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
கடக ராசிக்காரர்களே உங்களுக்கு தீபாவளி வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டிருந்தால் உங்களின் திட்டங்கள் வெற்றியடையும் காலமிது. மேலும் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். லட்சுமி தேவியின் அருளால் இன்று உங்களுக்கு திடீர் பண வரவுகள் வந்து சேரும்.
சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு தீபாவளிக்கு பின் பெரிய நிதி ஆதாயம் கிடைக்கபோகிறது. உங்கள் புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடும். இந்த தீபாவளிக்கு பின் சிம்ம ராசிக்காரர்களாகிய வாழ்க்கை மாற வாய்ப்புள்ளது.