இந்த ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகத்தால் கிடைக்கப்போகும் பலன்கள்!

0

இந்த ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகத்தால் கிடைக்கப்போகும் பலன்கள்!

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகார‌ர்களுக்கு கிடைக்கப்போகும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம் ராசிகாரர்களே நான்கு கிரகங்கள் சேரப்போவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குழந்தை பாக்கியம் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் ராஜயோகம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புது வேலைக்கு முயற்சி செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கேட்ட இடத்திற்கு புரமோசன் கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிக அவசியமாகும். செவ்வாய் 3ஆம் வீட்டில் மறைந்து வக்ரமடைவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் சில வாரங்களுக்கு ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் கவனம் தேவை. புதனும் இம்மாத இறுதியில் 7வது வீட்டிற்கு வந்து உங்கள் ராசியை பார்க்கப்போவதால் உங்களுக்கு இனி வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். இனி தொட்டது எல்லாம் துலங்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கப்போகிறது. மேலும் இனி வரும் நாட்கள் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த நாட்களாக அமையப்போகிற்து. ஏழைகளுக்கு உதவுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள் சந்தோஷங்கள் மேலும் அதிகரிக்கும்.

ரிஷபம் ராசிகாரர்களே சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் பயணம் செய்து வக்ர மடைந்து மீண்டும் ராசிக்கு திரும்புவார்.இதனால் சின்னச் சின்ன சண்டைகள் கூட நீங்கும் வைப்புள்ளது. ராசி நாதன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் கவனமும் நிதானமும் தேவை. நிதானமாக‌ பேசுங்கள். ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதால் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது அவசியமாகும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் வக்ரநிலையில் இருந்து மீண்டு நேர்கதிக்கு திரும்புவதால் ஆன்மீக பயணம் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வருமானமும் லாபமும் அதிகம் கிடைப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள் மாத இறுதியில் புதன் பகவானும் ஆறாம் வீட்டிற்கு வருவதால் தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் கவனமாக இருங்கள். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உறவினர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுங்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சதுர் கிரக யோகத்தால் பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வருவது சிறப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தால் பாதிப்புகள் குறையும்.

மிதுனம் ராசிகாரர்களே உங்கள் ராசிக்கு சிறப்பான யோகம் கிடைக்கப்போகிறது. காரியத்தடைகள் நீங்கி வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதோடு சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. எதிரிகளுடனான‌ பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வருவதோடு விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும். தொழில் முதலீடுகளில் இலாபம் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு யோக காலம் ஆரம்பமாவதால் சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். திடீர் திருமண யோகம் கைகூடி வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவுபடும் வாய்ப்புள்ளது. உணவு விசயத்தில் மிக கவனமாக இருங்கள். நீங்கள் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றுவது நல்லது.

கடகம் ராசிகாரர்களே உங்கள் ராசிக்கு நிறைய நல்லது நடக்கப்போகிறது. உங்களுக்கு வெற்றிகளுடன் கூடிய‌ நல்ல செய்தி தேடி வரப்போகிறது. மனதில் நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கும் காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நடைபெறும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குருபகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் புரமோசன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். இந்த மாதம் சொத்துக்கள், வீடு எதுவும் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அத்தோடு இரவு நேர பயணங்களையும் தவிர்க்கவும். மாத பிற்பகுதியில் வேலையில் பளு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மன அழுத்தமும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இப்பாதிப்புகள் குறைய கபாலீஸ்வரர் கற்பகாம்பாளை மனதிற்குள் நினைத்து வணங்குங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீபாவளிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுடைய‌ வாழ்க்கையில் பொன்மழை பொழியும் தெரியுமா!
Next articleஇன்றைய ராசிபலன் 21.10.2022 Today Rasi Palan 21-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!