இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா!

0

நீங்கள் வாழ்க்கையில் பலரிடம் பழகலாம், ஆனால் ஒருசிலரிடம் பழகும்போது மட்டும் அவர்கள் நம்முடைய கவனம் முழுவதும் அவர்களிடமே இருக்கும்படி பார்த்து கொள்வார்கள். சொல்லப்போனால் நம்மை வசியம் செய்து விடுவார்கள். அவர்களை பொறுத்தவரை மற்றவர்களை வசியம் செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று.

அனைவருக்கும் இந்த திறமையோ, குணமோ இருக்காது. இந்த குணம் இருப்பவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஜோதிடசாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களின் மனதை மாற்றுவது எளிதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களை விட மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வசிய திறமை இருக்கும் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
மற்றவர்களை எளிதில் வசியம் செய்யும் ராசிகளில் விருச்சிக ராசியும் ஒன்று. இவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று நமது கவனத்தை ஈர்ப்பதுடன் அவர்களுடன் தொடர்ந்து பழக விரும்ப வைக்கும். இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் ரகசிய குணம்தான், அவர்களின் திறமையும், சுவாரஸ்யமான பேச்சும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். தோற்றம், புத்திசாலித்தனம், சிந்தனைக என அனைத்தும் நிறைந்த புத்தகமாய் இவர்கள் இருப்பார்கள். உண்மையிலேயே இவர்கள் ஒரு காந்தம்தான்.

ரிஷபம்
நீங்கள் செல்லும் விசேஷங்களிலோ அல்லது பார்ட்டிகளிலோ குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் உங்களை அதிகம் ஈர்க்கிறாரக்ள் என்றால் அவர்கள் ரிஷப ராசிக்காரர்களாகத்தான் இருக்கும். இதுதான் அவர்களின் பலமே. அவர்களின் ஆளுமை அனைத்து இடங்களிலும் ஓங்கியிருக்கும். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்று திட்டம் தீட்ட அவசியமில்லை. அதுவாகவே அவர்களை தேடி வரும், இவர்களை தவிர்ப்பது என்பது முடியாத ஒன்று. பேசாமலேயே உங்களின் கவனத்தை ஈர்க்கும் திறமை இவர்களிடம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை போல வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை, இவர்களின் தனித்துவம்தான் இவர்களை கவனத்தை ஈர்க்கும் காந்தமாக மாற்றுகிறது. இவர்களின் புத்திசாலித்தனமும், வித்தியாசமான படைப்பாற்றலும் இவர்களை எவரையும் நண்பர்களாக மாற்ற உதவும். நீங்கள் கும்ப ராசிக்காரர்களை புரிந்து கொள்ள நினைத்தால் அது உங்களால் முடியாத காரியமாகும், இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இவர்கள் ஒரு கருத்தை பேசும்போது நமது கவனம் வேறு எங்கும் சிதறாது. பெரும்பாலும் இவர்களின் சிறப்பும், ஆற்றலும் இவர்களுக்கே தெரியாது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? இதை தெரிந்து கொள்ள முடியாது ஆனால் அதனை தெரிந்து கொள்ள முயலுவதே மிகவும் சுவாரஸ்ரயமான ஒன்றாகும். பயமே அறியாத இவர்களின் குணமும் இவர்களின் சாகசங்களும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். ரிஸ்க் எடுக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். இவருடன் இருப்பவர்கள் அனைவரும் இவர்களை போலத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வாழ்க்கை தனக்கு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ள இவர்கள் நினைப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனி நீங்கள் ஒரு நாளைக்கு 25 கப் காபி குடிக்காலம் – ஆய்வில் வெளிவந்த தகவல்!
Next articleஉங்க முடியும் இப்படி ஆகணுமா! இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்!