இந்த மூன்று ராசியையும் குறி வைத்திருக்கும் குரு..! ஆட்டிப்படைக்க காத்திருக்கும் சனி!இந்த வாரம் என்ன நடக்கபோகிறது !

0

இந்த வாரம் சஞ்சாரத்தை பார்த்தால் மிதுனம் ராசியில் ராகு விருச்சிக ராசியில் சூரியன், துலாம் ராசியில் செவ்வாய், புதன் தனுசு ராசியில் குரு, சனி, கேது,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் சஞ்சரிகிறார். கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது.

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்று பார்க்கலாம்.

சந்திராஷ்டம் ராசிகள்
மீனம் ராசிக்கு நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 3.44 மணி வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

மேஷம் ராசிக்கு நவம்பர் 26 காலை 03.44 மணி முதல் நவம்பர் 28 அதிகாலை 07.33 வரையும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

மேஷம்
ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், புதன் எட்டாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் குரு, சனி கேது, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. குரு பகவான் பார்வையால் நன்மைகள் நடக்கும், இன்டர்வியூவில் வெற்றி கிடைக்கும் புதிய வேலை கிடைக்கும்.

ஏழாம் வீட்டில் இருந்து செவ்வாய் புதன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது, வீடு வாங்கலாம். மாணவர்களுக்கு நல்ல வாரம். கல்வி நிலை அற்புதமாக இருக்கும். உயர்கல்வி யோகம் வரும்.

நல்ல வேலை மாற்றம் கிடைக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தடைபட்ட காரியங்கள் கைகூடும்.

தொழிலில் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து போகணும். கந்த சஷ்டி கவசம் படிங்க நல்லதே நடக்கும். வார இறுதியில் பயணங்களில் கவனம் தேவை.

நவம்பர் 26 காலை 03.44 மணி முதல் நவம்பர் 28 அதிகாலை 07.33 வரையும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

ரிஷபம்
ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் புதன், செவ்வாய் ஏழாம் வீட்டில் சூரியன், எட்டாம் வீட்டில் குரு, சனி,சுக்கிரன்,கேது என இந்த வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் பணவரவு அதிகமாகும். சூரியன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண தடைகள் விலகும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அஷ்டமத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.

முன் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் குழப்பம் வரலாம் உங்க பேச்சில் கவனமும் பொறுமையும் தேவை. முதலீடுகள் அதிகம் செய்யாதீங்க.

நீண்ட தூர பயணங்கள் எதையும் இரவில் வைத்துக்கொள்ள வேண்டாம். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று சனி கேது உடன் சேர்ந்திருக்கிறார், விபரீத ராஜயோக காலமாகும். சனி பகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அஷ்ட லட்சுமியை வழிபட பாதிப்புகள் நீங்கும்.

மிதுனம்
ராசிக்குள் ராகு ஐந்தாம் வீட்டில் புதன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் குரு, சனி, கேது, சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

உங்களுக்கு யோகமான வாரம். புதனின் அனுகூலம் சந்தோஷத்தை தரும் திடீர் அதிர்ஷ்டம் வரும். குருவின் நேரடி பார்வை அதிர்ஷ்டத்தை தேடி வருகிறார். சகோதர உறவு சந்தோஷத்தை கொடுக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள்.

வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் பயணங்களினால் சிறப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

அரசு உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் நீங்க பெருமாள் கோவிலுக்கு போய் புதன்கிழமை விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்
ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் புதன், செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆறாம் வீட்டில் குரு,சனி கேது,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு நல்லது நடக்கத் தொடங்கும். ஒளிமயமான எதிர்காலம் உற்சாகத்தை கொடுக்கும்.

சூரியனால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. காரணம் செவ்வாய் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை பளு குறையும்.

ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், சுறுசுறுப்பாக உற்சாகமாக இருப்பீர்கள். சொந்த இடம் வாங்க யோகம் தேடி வருகிறது. புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு வருகிறது. சினிமா, கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

உயர்பதவிகள் தேடி வரும். தனலாபம் தரக்கூடிய வாரம். மகிழ்சிகரமான வாரம். அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம்
ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, மூன்றாம் வீட்டில் புதன், செவ்வாய், நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் குரு, சனி கேது,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

இந்த வாரம் மாற்றங்களும் முன்னேற்றங்களையும் தரக்கூடிய வாரம். காரணம் குருவின் பொன்னான பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் தொழிலில் லாபங்கள் தேடி வரும். பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் உள்ள பிரச்சினைகள் நிவர்த்தியாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த வாரம் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மை நடக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை உற்சாகத்தை தரும்.

அலுவலகத்தில் நீங்க செய்யும் வேலைக்கு மதிப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும் வீட்டில் மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்க தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். பெரும் சந்தோஷம் தேடி வரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி
ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன்,செவ்வாய் மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் குரு, சனி, கேது, சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் வாரம். உங்க ராசி நாதன் புதன் அற்புதங்களை தரப்போகிறார்.

சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். குரு பகவானால் பதவி மாற்றங்கள், வேலை மாற்றங்கள் தேடி வரும். வெளிநாடு யோகம் கை கூடி வரப்போகிறது. அதிகார பதவிகள் கூடி வரும். பேச்சில் இனிமை பிறக்கும். முயற்சிகளில் வெற்றியை தேடி தருவார் சூரியன். இடமாற்றம் ஏற்படும். சிறுதூர பயணங்கள் ஏற்படும். பித்ரு கடன் செய்யலாம். ஞாயிறு கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்.

முன்னோர்களுக்கு போய் அன்னதானம் சேரும். திடீர் வருமானங்கள் வரலாம் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். எதையும் எதிர்கொள்ளும் பலம் கிடைக்கும்.

பணப்புழக்கம் நன்றாக இருக்கும், அர்த்தாஷ்டம சனி தடையை ஏற்படுத்துவார். பேச்சில் நிதானமாக இருங்க. கோபமாக பேச வேண்டாம். பொறுமையோடு இருங்க நல்லது நடக்கும். நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வழிபடுங்க நல்லது நடக்கும்.

துலாம்
ராசிக்குள் செவ்வாய், புதன், இரண்டாம் வீட்டில் ராசிநாதன் சூரியன், மூன்றாம் வீட்டில் குரு, சனி கேது, சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. சந்தோஷ செய்திகள் தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பணவரவு அதிகமாக இருக்கும். நீங்க பேசுற பேச்சுக்கள் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும்.

உங்க மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். தூர பயணங்களால் பலன்கள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். எதிலும் சுறுசுறுப்பாகவும் தெம்போடும் இருப்பீர்கள்

. உங்களுக்கு வீடு மாற்றம் நன்மையை தரும். கணவன் மனைவி உறவு உற்சாகத்தை தரும். இல்லறம் நல்லறத்தை தரும். அப்பா வழி உறவுகளால் நல்லது நடக்கும். புதிய வேலைகள் கிடைக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். குல தெய்வ வழிபாடு நிறைய நன்மையை தரும்.

பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
ராசிக்குள் சூரியன், இரண்டாம் வீட்டில் குரு,சனி, கேது, சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய்,புதன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. உங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். எதிர்பாராத லாபங்கள் தேடி வரும்.

அரசு துறையில் பணி செய்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். உங்க ராசி நாதன் செவ்வாய் பரிவர்த்தனை யோகம் பெற்று அமர்ந்துள்ளார்.

உங்க களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ளதால் திருமணம் கை கூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் பேச்சில் கவனமாக இருங்க. பணவரவு அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை அதிகரிக்கும். நெருக்கடிகள் விலகும்.

சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் ரொம்ப கோபப்படாதீங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. சுப முயற்சிகள் கை கூடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நடக்கும். அதிக பணவரவு கிடைக்கும். உடம்புல உஷ்ணத்தினால் காயங்கள் புண்கள் வரலாம். சிவன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்க நல்லது நடக்கும்.

தனுசு
ராசிக்குள் சனி, கேது, குரு, சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதனோடு கிரகங்களின் சஞ்சாரம் தொடங்குகிறது.

குரு ஜென்மத்தில் அமர்ந்து யோகத்தை தருகிறார். இந்த வாரம் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் வரலாம். அதை சமாளிப்பீர்கள். புதன் செவ்வாய் உங்க வருமானத்திற்கு வழிகாட்டுவார்கள்.

சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். குழந்தைகள் மூலம் நல்லது நடக்கலாம். கடவுள் அருளால் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பார்வையால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தடைகள் நீங்கும். போட்டு பந்தையங்களில் வெற்றி கிடைக்கும்.

சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். உங்க பிள்ளைகளையும் கணவர் அல்லது மனைவியையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்
ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சூரியன், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதனோடு இந்த வாரம் தொடங்கிறது. தொழிலில் ஆதாயம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

செவ்வாய், புதன் சேர்க்கையால் புதிய தொழில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். வீடு நிலம் வாங்கலாம். குரு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். குருவின் பொன்னான பார்வையால் பயணங்கள் நன்மையில் முடியும்.

வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு திறமைகள் பளிச்சிடும். இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரும் அவப்பெயர்கள் விலகும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் பணவரவு உண்டு. நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று காலபைரவரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சூரியன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் புதனோடு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் தொடங்குகிறது. முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்கள் கிடைக்கும்.

பண வரவு அதிகமாக இருக்கும். உங்க ராசி அதிபதி சனியால் புதிய மாற்றங்கள் கிடைக்கும். வேலை கை கூடி வரும். உடல் நல பிரச்சனைகள் நன்றாக இருக்கும்.

நினைத்தது நிறைவேறும் காலம் இது புதிய தொழில் தொடங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மன உளைச்சல்கள் விலகும்.

உற்சாகமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நிதானத்தை கடைபிடிப்பீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.

வீடு கட்டும் யோகம் தேடி வருகிறது. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி பயில வாய்ப்பு தேடி வருகிறது.

கும்பம் ராசிக்கு நவம்பர் 22ஆம் தேதி பகல் 12.03 மணி முதல் நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் வேகமாக போக வேண்டாம் மெதுவாக செல்லவும்.

மீனம்
ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் சூரியன், எட்டாம் வீட்டில் செவ்வாய், புதன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சுமாரான பலன்களையே தரும். கிரகங்களின் சஞ்சாரத்தினால் புதிய அனுபவங்கள் தேடி வரும். நன்மைகள் நாடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும்.

வண்டி வாகனம் வாங்குவீர்கள். பண தேவைகள் நிறைவேறும். பொறுமையோடு இருங்க. தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வம்பு பேச்சுக்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க.

நிதானமாக இருங்க நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து போங்க. உணவு விசயத்தில் கட்டுப்பாடு தேவை.

வயிறு பிரச்சினைகள் வரலாம் காரணமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளுங்கள்.

பரம்பரை நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. இந்த வாரம் நன்மையும் தீமையும் கலந்த வாரமாக அமைகிறது.

மீனம் ராசிக்கு நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 3.44 மணி வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 23.11.2019 !
Next articleஎதையும் வெளிப்படையாக கூறும் சிம்ம ராசிக்காரர்களே! 2020 உங்களுக்கு எப்படி இருக்க போகுது தெரியுமா?