இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் குருறும் சனியால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் எந்த‌ ராசிக்கு விபரீத ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா! இந்த 3 ராசியும் படியுங்க!

0
297

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் குருறும் சனியால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் எந்த‌ ராசிக்கு விபரீத ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா! இந்த 3 ராசியும் படியுங்க!

சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு

குரு பகவான் இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார். கால புருஷ தத்துவத்திற்கு லாப வீடான 11வது வீட்டில் குரு அமர்வது நன்மைகளை ஏற்படுத்தும்.இந்த கிரகங்களின் இடமாற்றத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி: உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன் இணைந்துள்ளன. மகிழ்ச்சியும் நிம்மதியும்
அதிகரிக்கும். கோபமான பேச்சை கட்டுப்படுத்தவும். சனி மற்றும் குரு ஆகிய இரண்டு கிரகங்களின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது.

வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். மாத பிற்பகுதியில் சூரியன் இரண்டாவது வீட்டிற்கு சென்று கேது உடன் பயணம் செய்கிறார். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவைப்படும். அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். புதிய வேலை புரமோசனுக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு இது அற்புதமான மாதம். குரு பார்வையால் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். வேலை விசயமாக சிலர் வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காதல் திருமண வாழ்க்கையில் சிலமாற்றங்கள் ஏற்படலாம். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் கவனமும் நிதானமும் தேவைப்படும். பதற்றத்தை தவிர்க்கவும்.

மாத முற்பகுதியில் செவ்வாய் சூரியன் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். புதன் பகவான் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்கு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் வரலாம் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிவ ஆலயம் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

விருச்சகம் ராசி: மாத முற்பகுதியில் சூரியன், செவ்வாய், புதன் விரைய ராசியில் இணைந்துள்ளன. வேலையில் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். குடும்பத்தோடு குதூகலமாக இருப்பீர்கள்.

ஆலய தரிசனத்திற்கு ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டியிருக்கும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும்.

மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் காய்ச்சல் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம் தேவை. தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். ஆன்மீக பயணம் செய்வீர்கள்.

குருபகவான் மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாத பிற்பகுதியில் சூரியன், புதன் உங்கள் ராசிக்கு வந்து கேது உடன் இணைகின்றனர். பேச்சில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு ராசி அதிபதி செவ்வாயின் பார்வை கிடைப்பதால் சிறுசிறு சலசலப்புகள் வந்து செல்லும். மாதத்தின் முற்பகுதியில் அலைச்சல் ஏற்படும்.

உஷ்ண கிரகங்களின் சஞ்சாரத்தினால் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது மருத்துவ ஆலோசனை அவசியம் தேவைப்படும்.

தனுசு ராசி: ராசிக்குள் சுக்கிரன் பயணம் செய்கிறார். ராசிநாதன் குரு மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் பயணம் செய்கின்றனர். பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார்.

வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சூரியன், செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டின் மீது விழுவதால் பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். இரண்டாவது வீட்டில் குரு, சனியால் பண வரவு அதிகரிக்கும்.

மாத பிற்பகுதியில் சூரியன் விரைய ஸ்தானத்திற்கு வந்து கேது உடன் இணைகிறார். திடீர் செலவுகள் வரலாம். வேலை விசயமாக வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு மாத பிற்பகுதியில் செல்வதால் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு மாதம் முழுவதும் நன்றாக இருக்கும். மன அழுத்தம் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் சிலருக்கு தூக்கமின்மை கண்களில் பிரச்சினை வரலாம் கவனம் தேவைப்படும். மருத்துவ ஆலோசனை செய்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 03.11.2021 Today Rasi Palan 03-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleதனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் அதிஸ்டம் என்ன! எந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபகமான சூழல் அமையப்போகிறது!