ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக காணப்படுவர்.
அந்தவகையில் எந்தெந்த ராசிகள் காதலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரையில் அவர்களால் முடிந்தால் அவருடன் இருக்கும் அனைவரின் பின்னணியையும் சோதனை செய்வார்கள்.
அவர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள், மேலும் தங்களை எவரும் மோசமான வழியில் ஆச்சரியப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.
யாரையும் இவர்கள் எந்த உடனடியாக நம்பவோ, விரும்பவோ மாட்டார்கள் நேரில் சென்று பார்த்து முழுநம்பிக்கை வந்தால் மட்டுமே இவர்கள் மேற்கொண்டு அவர்களுடன் உறவைத் தொடர்வார்கள்.
தங்களால் முடிந்தவரை அவர்களை பற்றி உறுதிசெய்து கொண்ட பின்தான் அவர்களை காதலிப்பதை பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அவநம்பிக்கையோடு இருப்பார்கள், அனைவரிடமும் இருக்கும் இருண்ட பக்கத்தையே இவர்கள் பார்ப்பார்கள்.
எனவே அவசரமாக காதலில் இறங்க இவர்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டார்கள்.
இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், எனவே அவர்கள் தங்களின் ஆற்றலை உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவார்கள்.
தங்களுடன் பழகும் அனைவரையுமே இவர்கள் சந்தேக கண்ணுடன்தான் பார்ப்பார்கள். தன்னை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது, காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலுமே எச்சரிக்கையாகத்தான் இருப்பார்கள்.
தன்னை அனைத்து சூழ்நிலைக்காகவும் இவர்கள் தயார்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் மிகவும் எதார்த்தவாதிகள், எனவே தங்களுடன் பேசும் அனைவரின் பின்புலங்களையும் முடிந்தவரை தெரிந்து வைத்திருப்பார்கள். தன்னைத் தவிர யாரும் தன்னுடன் இறுதி வரை வரப் போவதில்லை என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் காதலில் விழவோ அல்லது உறவின் அடுத்தநிலைக்கு செல்லவோ நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் முழுமையாக தங்களை பாதுகாத்துக் கொள்பவர்கள்.
கன்னி
எச்சரிக்கையாக இருப்பது என்பது இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் உணர்வாகும், இவர்கள் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளவும், உறவை வளர்த்துக் கொள்ளும் முன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அசாதாரணமானவையாக இருக்கும்.
எந்தவொரு செயலிலும் இறங்கும் முன் தீர ஆலோசித்து இறங்குவது சிறப்பான முடிவுகளை வழங்கும் என்பதில் இவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.
இவர்கள் பர்பெக்ட் ஆனவர்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தமல்ல ஆனால் எந்தவிதத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார்கள்.
ஒரு உறவை நோக்கி முதல் படியை எடுப்பதற்கு முன்பு தங்கள் துணையின் சோகமான பக்கங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். ஒருமுறை இதயம் நொறுங்கி விட்டால் அதிலிருந்து மீண்டுவர இவர்கள் நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள்.
எனவே அதுபோன்ற வலிநிறைந்த காலம் மீண்டும் வரக்கூடாது என்பதில் இவர்கள் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பார்கள்
இவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் எந்தவிதமான தேவையற்ற மன வேதனையும் ஏற்படாமல் தடுக்கிறார்கள்.
தவறான முடிவெடுப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை சந்திப்பதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே காதலில் இவர்கள் அனைத்து நிலைகளிலும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.