இந்தி நடிகர் நசுருதீன் ஷா தனது உடல் நிலை குறித்த செய்திக்கு மறுப்பு!

பிரபல இந்தி நடிகர்கள் இர்பான்கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்தி நடிகர் நசுருதீன் ஷா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல் பரவி வருவதால் திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கவலையையும் அதிர்ச்சியையும் பதிவிட்டு வருகின்றனர்.
நசுருதீன் ஷா தனது உடல் நிலை குறித்து முகநூல் பக்கத்தில், “நான் நலமாக உள்ளேன். கொரோனா ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறேன். என் உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எனது உடல் நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
By: tamilpiththan