இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது நிகழ்ந்த சுவாரஷ்யம்! வைரலாகும் காதல்ஜோடியின் வீடியோ!

0
460

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலேயே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தனது காதலிக்கு புரொபோஸ் செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றும் நடந்தேறியுள்ளது.

அதாவது ஸ்டேடியத்தின் பெவிலியனில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அவரது நண்பர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்ப்பாரத அந்த பெண் செய்வதறியாது திக்குமுக்காடி போகிறார். பின்பு காதலியின் கையில் மோதிரத்தை அணிவித்து காதலை சொல்லும் அந்த இளைஞரை காதலி கட்டியணைத்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை பார்த்து அங்கு அவர்களை சுற்றி இருந்த ரசிகர்கள் பலர் கத்தி கூச்சலிட்டு, கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொண்ட முக்கிய நாளில் மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அவர்களால் மட்டுமல்ல, அங்கிருந்த பலருக்கும் மறக்கமுடியாத ஒன்றாகவே இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: