மதுபானம் கிடைக்காத காரணத்தால் சானி டைசரை குடித்த நபர்! நடந்த சம்பவம்!

0

மதுபானம் கிடைக்காத காரணத்தால் சானிடைசரை குடித்த நபர்! நடந்த சம்பவம்!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில். மதுபான கடைகள் மூடியுள்ள‌ நிலையில் என்ன செய்வது என தெரியாமல் மது பிரியர்கள் போதைக்காக ஏங்கிய நிலையில் தற் (கொ லை) மற்றும் போராட்டங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூரில் பெர்னார்ட்(35) என்பவர் திருப்பூரில் சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். இவர், மதுவுக்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில், குடிக்க முடியாத நிலையில் விரக்தியில் இருந்த அவர், கொரோனா தடுப்[பு நடவடிக்கைக்காக‌ நிறுவனம் சார்பில் வழங்கபட்ட கைகழுவ பயன்படுத்தும் சானிடைசரை தண்ணீரில் கலந்து போதைக்காக‌ குடித்துள்ளார்.

இதனால், அவர் ஒருநாள் முழுவதும் கண் விழிக்க முடியாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?
Next articleஇலங்கைக்கு அருகிலுள்ள தீவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது!