இதையல்லாம் சப்பிடுங்க ஒரே மாதத்தில் உயரமா வளர்விங்க!

0
898

ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம்.

சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம்.

குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்

நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (Human Growth Hormone -HGH) சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்.

தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படும். அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். சிறு வயதினர் (0-12) தினமும் 8-11 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.

ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.

கால்சியம் சத்துகளை நம் உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையானது வைட்டமின் டி. அதேபோல, இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியக்கூடியது. சூரிய ஒளி உடலில் படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.

பீன்ஸில் அதிகப்படியான விட்டமின் மற்றும் ப்ரோட்டின் இருக்கிறது. உயரமாக வளர்வதற்கு இவை மிகவும் அவசியம். பீன்ஸில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் துணை நிற்கின்றன.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே உயரமாக வளர முடியும்.

பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும். ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது.

ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.
இதில் அதிகளவு ஃபைபர்,விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ஹார்மோன் வளர்சிக்கு உதவிடும்.

நூல்கோலில் அதிகப்படியான விட்டமின்ஸ்,மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதோடு இது கலோரி குறைவானதும் கூட. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உயரமாக வளர்வதற்கான ஹார்மோன் தூண்டப்படும்.

பாக்கெட் பால் இல்லாது, தூய பசும்பாலில் கால்சியம் சத்து அதிகமாக கிடைத்திடும். எலும்புகளின் வளர்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது கால்சியம்.
எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் அதற்கு நம்முடைய எடையை தாங்கக்கூடிய சக்தி கிடைத்திடும். உயரமாக வளர்வதற்கு முக்கியத்தேவை இந்த கால்சியம் தான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: