இது ரொம்ப தவறு சரியான விளக்கம் வேண்டும் விஜய் டிவிக்கு மதுமிதா கணவரின் குற்றச்சாட்டு..!

0

பிக்பாஸ் ஃபைனலில் பங்கேற்காத போது தன்னுடைய காட்சியை பயன்படுத்திய விஜய் டிவி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மதுமிதாவின் கணவர் மோசஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. முகேன் வெற்றியளாராக தேர்வு செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதாவின் கணவர் பங்கேற்றுள்ளதுபோல் பழைய வீடியோவை இணைத்து காட்டியுள்ளனர்.

இந்த காட்சி தற்போது சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மதுமிதாவின் கணவர் மோசஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிக்பாஸ் ஃபைனலில் தானோ மதுமிதாவோ அல்லது தங்களின் குடும்பத்தை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் எங்களை அவர்கள் அழைக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. நானும் பார்த்தேன், அதில் நான் பங்கேற்றதாக போடப்பட்டுள்ளது. இதனால் பலரும் நான் பங்கேற்றதாக நினைத்து பேசுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. இது பெரிய தவறு. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என மோசஸ் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article45 வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா கேவளமாக பேசிய ரசிகரால் அதிர்ச்சியான பிக்பாஸ் கஸ்தூரி !
Next articleஇதைச் செய்தால் வீட்டிற்குள் தெய்வ சக்தி அதிகரிக்குமாம்!