இது கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்!

0

சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும்.

ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம்.

விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று இருக்கும்.

விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விந்துவின் அடர்த்தி அதிகமாகும்.

7 பாதாம் மற்றும் 2 உலர்ந்த பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

மறுநாள் காலையில் பாதாம், பேரிச்சம் பழம், 4 ஏலக்காய், 5 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் 3-4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் இதை சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நன்கு கனிந்த ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, அதைச் சுற்றி கிராம்பை குத்தி, 1 வாரம் அப்படியே வைத்து, பின் அந்த கிராம்பை ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 4-6 கிராம்பை அதிகாலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து உட்கொண்டு வர, விந்து அடர்த்தியாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3-4 ஆப்பிளை உட்கொண்டு, ஒரு டம்ளர் பாலைக் குடித்து வந்தால், 1-2 மாதத்தில் நீர் போன்ற விந்து பிரச்சனை நீங்கி, விந்து அடர்த்தியாகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளான மீன்கள், ஆளி விதை, அவகேடோ, வால் நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகமாகும்.

5-7 உலர்ந்த பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் பாலுடன் அதை சாப்பிட வேண்டும்.

இதனால் அவற்றில் உள்ள சத்துக்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, விந்துவின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றம்!
Next articleமனைவியை தேர்வு செய்வது எப்படி!