இன்றைய நவீன சமூகத்தின் பிரதான அவலமாக உள்ள இதய கோளாறு காரணமாக பலர் உயிரிழப்பதில் மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது. எனவே ஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று பல்வேறுபட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இதய ஆரோக்கியத்தினை பேணுவதில் மிக முக்கிய உணவுகள் பற்றி நோக்குவோம்.
எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகாடோ எண்ணெய் ஆகியன பாதுகாப்பான எண்ணெய்களாக உள்ளதுடன் இவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை கல்லீரலுக்கு அனுப்புகின்றன. எதுஎவ்வாறாயினும்; எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவாகவே பயன்படுத்துதல் நல்லது.
வெள்ளை சால்மன் மீன்
வெள்ளை சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலுவளிப்பதோடு அதிலுள்ள செலினியம் இதய வால்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
சிவப்பு பீன்ஸ்
கடைகளில் விற்கும் சிவப்பு பீன்ஸ் இனை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு வரும் போதுஇதய நோய்கள் கிட்ட நெருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஈரல்
ஈரலில் உடலுக்கு தீங்கு விளைவிக்காதும் மிகவும் ஆரோக்கியமானதுமான கொழுப்புகள் அதிகளவில் காணப்படுவதனால் அவை இதயத்தில் படியும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகின்றது. எனவே நீங்கள் ஈரலை பயமேதுமின்றி தாராளமாக உண்ணமுடியும்.
உலர் திராட்சைகள்
சிறந்த சுவை மற்றும் அற்புதமான சத்துக்கள் நிறையப் பெற்ற உலர் திராட்சைகளிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தில் அதிகமாகும் சோடியத்தை குறைக்து இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
வால் நட்
வால் நட்டில் உள்ள ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியன தினமும் அதனை சாப்பிடுவதன் மூலம் இதயம் 100 வயது வரை ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கும்.
ஓட்ஸ்
ஸ்லிம்மாக இருக்கவும், இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கவும் தினமும் இலகுவாக சமைக்கக் கூடிய ஓட்ஸ் சாப்பிடுங்கள்.
பாதாம்
பாதாமை ஊற வைத்து சாப்பிடும் போது இதய நோய் மட்டுமன்றி சர்க்கரை வியாதி மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்க முடியும்.
பழங்கள்
ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவற்றிலுள்ள நார்சத்துக்கள் இதய தசை நார்களுக்கு மிகவும் வலுவை தருகின்றதனால் வாரம் தவறாமல் அவற்றை சாப்பிட்டு வருவது நல்ல பலனைத்தரும்.
By: Tamilpiththan