ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஜெசிக்கா! இன்று எப்படியிருக்கிறார்?

0

அமெரிக்காவில் 1987ம் ஆண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஜெசிக்கா என்ற குழந்தை விழுந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடிவிட்டார்கள்.

கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 14ம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது பாட்டி வீட்டின் பின்புறம் ஜெசிக்கா என்ற 18 மாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

தொலைபேசி அழைப்பு வந்ததும் குழந்தையின் தயானா ரீபா செஸ்சி உள்ளே செல்ல, ஜெசிக்கா எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

திரும்பி வந்து பார்த்த போது மகளை காணாத ரீபா, ஆழ்துளை கிணற்றுக்குள் சத்தம் கேட்கவே துடிதுடித்து போனார்.

பின் பொலிசாருக்கு தகவல் அளிக்க மீட்புப்படையினரும் விரைந்து வந்தனர், கிணறு 22 அடி ஆழம் தான் என்றாலும், குழந்தையை மீட்க எடுத்த பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

நேரம் செல்ல செல்ல அந்த ஆழ்துளை கிணறுக்கு அருகே மற்றொரு கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

எனினும் பாறை அதிகம் என்பதால் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது, சுமார் 45 மணிநேரம் ஆகி மயக்கநிலையில் ஜெசிக்கா மீட்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, 15 அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

1989-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ், ஜெசிகாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருது வழங்கி பாராட்டினார்.

தற்போது ஜெசிகாவிற்கு 33 வயது ஆகிறது. ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

அமெரிக்காவில் இந்த ஒரு சம்பவம், அதன்பின் எந்தவொரு குழந்தையும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழவில்லை, பயன்படுத்தப்படாத அனைத்து கிணறுகளையும் இரும்பு மூடி போட்டு மூடிவிட்டார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை அசினின் அழகான மகள்! வீட்டில் கொண்டாட்டம் – கண்கவர்ந்த புகைப்படம் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 31.10.2019 !