ஆர்யா கைது செய்யப்படுவாரா? சுசானாவின் குடும்பம் எடுத்த அதிரடி முடிவு! சர்ச்சையில் சிக்கும் தொலைக்காட்சி!

0
477

சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில், பங்கு பற்றிய இறுதி மூன்று போட்டியாளர்களில் சுசானாவும் ஒருவர். ஆர்யா இறுதியில் யாரையும் தெரிவு செய்யாதமையினால் சுசானாவின் தந்தை ஆர்யா மீது பொலிஸில் முறைபாடு செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

அது மட்டும் இல்லை, தற்போது ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை வைத்து தான் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

நீண்ட நாட்களாக தனக்கான பொருத்தமான மணப்பெண் தேடிவரும் ஆர்யா, இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் தொலைக்காட்சியில் மணப்பெண்ணை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை நடத்தப் போவதாகவும் அதில் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் ஆயிரக்கணக்கான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து 16 பெண்களை தேர்வு செய்து அவர்களிடம் இந்த நிகழ்ச்சி வாயிலாக நேர்காணல் நடத்தினார்.

இந்நிலையில் போட்டியின் இறுதியில் யாரையும் தெரிவு செய்ய வில்லை. ஆர்யா இப்பொழுது திருமணம் செய்யும் மனநிலையில் இல்லையென்றும் மேலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்பாக பழகிவிட்ட ஆர்யா, அதில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்தால் மற்றவர்கள் காயப்படுவார்கள் என்று எண்ணி குழப்பத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஒருவேளை அப்படி ஆர்யா திருமணம் செய்யும் மனநிலையில் இல்லையென்றால் நிகழ்ச்சி எதற்கு?

போட்டியாளர்களின் நிலை என்ன? ஒன்று புரிகிறது, தொலைக்காட்சிக்கு அதிஷ்டம், போட்டியாளர்களுக்கு பிரபலம்.. நமக்கு பொழுதுபோக்கு.. அவ்வளவுதான் போல ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’…

ஒரு வாரத்தில் மட்டும் 106234 ஆயிரம் பேர் இந்த தொலைக்காட்சியை பார்த்துள்ளனர். இதனால் பார்வையாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த தொலைக் காட்சியின் மீதும் பார்வையாளர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததில் இருந்து ஆர்யா எந்த பதிலும் கூறாத நிலையில் இவ்வாறான கருத்து வைரலாகி வருகின்றது.

இதேவேளை, சர்ச்சைகளுக்கு முடிவு ஆர்யாவின் பதிலால் மட்டுமே முடியும் என்பது உண்மை. பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை..

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: