ஆரோக்கியமான நுறையீரலை தாக்கும் நியூமோனியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0
597

இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்றனர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.

முதல்நிலை நியூமோனியா, இது ஆரோக்கியமான நுறையீரலில் ஏற்படுகிறது.

இரண்டாம்நிலை நியூமோனியா, இது ஏற்கெனவே சிதைவுற்ற நுறையீரலில் அல்லது நோய் தொற்றுவின் காரணமாக கடந்த காலங்களில் காயப்பட்ட நுறையீரல் அல்லது பிறவிக்கோளாறுகள் உள்ள நிலையில் ஏற்படுகிறது.

யாருக்கு இந்நோய் ஏற்படும்?
இரண்டு வயதிற்குட்பட குழந்தைகள் சிறுபிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், என இரண்டு வித்தியாசமான வயதினரில், இந்த நோய் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்று. இந்நோய் இரண்டு வயதிர்க்குட்பட்ட குழந்தைகளில் பொதுவாக அதிகளவு இருக்கும் மற்றும் குறிப்பாக உணவுப்பற்றாக்குறையுள்ள குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்தும். நியூமோனியா போதைப்பொருள் / மதுபானம் பழக்கமுள்ளவரில் மற்றும் கர்பிணிப்பெண்களிலும் மிகப்பொதுவாக காணப்படும்.

கீழ்காணும் நிலைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு நியூமோனியா ஏற்ப்படும்.

எண்ணெய் போன்ற மூக்கு சொட்டு மருந்துகள் பயன்படுத்துவது (அறியாமை மற்றும் படிப்பறிவின்மையினால்), குறிப்பாக ஊரகப்பகுதிகளில்.

தவறான ஊட்டும் முறைகள்

தற்செயலாக மண்ணெண்னையை நுகர்தல் (நஞ்சூட்டல்)

வாலிப வயதினரில்
பொரும்பாலான மக்களில் நியூமோனியா ஆரம்பத்திலேயே ஏற்படும்.

சலி மற்றும் காய்ச்சல் (சில வேலைகளில் 104 o எப் – ஐவிட அதிகமாக)

நடுங்கச்செய்யும் குளிர்

சலியுடன் இருமல். சலி நிறமாறினதாய் இருக்கும் மற்றும் சில வேலை இரத்தமாய் இருக்கும்.

குறுகின/ குறுமூச்சு (ஷார்ட் பிரிதிங்)

நோயானது நுறையீரலின் உறையுடன் தொடர்புடையதாக இருக்கும்போது நெஞ்சு வலி ஏற்படலாம். இந்த வலி மிக கூர்மையானதாகவும் மற்றும் மோசமானதாக குறிப்பாக ஆழ்ந்து மூச்சு விடும்போது இருக்கும். இத்தகைய வலி நுறையீரல் உறை சவ்வழற்சி வலி (ப்லூரைடிக் பெயின்)என்று அழைக்கப்படுகிறது.

பிற நியூமோனியா நிகழ்வுகளில் அறிகுறிகள் மெல்லமெல்ல தோன்றும். மோசமான இருமல், தலைவலி மற்றும் தசை வலி போன்றவைகள் மாத்திரமே அறிகுறிகளாக இருக்கலாம்.

சில நியூமோனியா பாதிப்பு கொண்டவர்களில் இருமல் என்பது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஏனெனில் நுரையீரலில் உள்ள நோய் தொற்று கண்ட இடம் பெரிய காற்றுக்குழாய்களுக்கு மிக தூரமாக இருக்கும்.

சில நேரங்களில் தனிநபரின் தோலின் நிறம் பர்ப்பில் நீல நிறமாக மாறலாம் (இந்த நிலை ஸையனோஸிஸ் என்றறியப்படுகிறது) இது இரத்தத்தில் பிராண வாயு குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது.

எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள்
ஒருவருக்கு நியூமோனியா ஏற்படும் நிலையில் எடுக்கவேண்டிய முன் எச்சரிக்கைகள் பின் வருவன. தனி நபர் சுகாதாரம் பேணலிருந்து ஆரம்பமாகிறது. வாயினை துணிகொண்டு மூடவேண்டும் அப்படி செய்வதால் நோய் தொற்று சுற்றியுள்ள மற்றவர்களுக்கு பரவாது.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
இருமல்

காற்று செல்லும் பாதியிலுள்ள சளிபோன்றவற்றை சுத்தம் செய்ய, நச்சுப்பொருள் உள்ளே செல்வதைத் தடுக்க! இருமல் நமக்கு நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். அது எப்படி இருமுகிறோம் என்பதைப் பொறுத்தது. தொடர் அல்லது மோசமான இருமலைத் தொடர்ந்து ஜுரம், மூச்சு வாங்குதல் அல்லது ரத்தம் கலந்த சளி வெளியானால், உடனே மருத்துவ சிசிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இருமல், நுரையீரல் வியாதியின் மிகச் சாதாரணமான ஒரு அறிகுறியாகும்.

மூச்சுவாங்குதல்

இது நுரையீரலில் ஏற்படும் தொந்தரவு காரமாணக் கூட ஏற்படும். இதயநோய், கோபம், அவசரம் காரணமாகவும் இருக்கும். திடீரென வரும் ஜுரம், ஜுரம் தொடர்ந்து இருப்பது, மற்ற தொந்தரவுகளுடன் சேர்ந்து வரும்போது, நோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உடன் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். வயதாகுதல் காரணமாக மூச்சு வாங்குதல் ஏற்படாது. எனவே மூச்சு வாங்கினால், உடனடி சிகிச்சை தேவை. கவனமாக இருக்க வேண்டும்.

மூச்சு இழுப்பு

இது ஒரு வகை சத்தம். மூச்சு இழுக்கும்போதோ, வெளியிடும் போதோ வெளிவரும். காற்று போகும் பகுதியில் ஏற்படும் அடைப்பு, சில திசுக்களின் அடைப்பால் இழுப்பு உண்டாகும். அதிகமான நீர் அல்லது சளி வெளியாகுதல், வெளியிடத்து பொருள் ஒன்று உள்ளிழுக்கப்பட்டு அது காற்று போகும் பகுதியை அடைப்பதனால் இழுப்பு ஏற்படுகிறது. நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மோசமாகும்போது இழுப்புதான் முதல் அறிகுறியாக இருக்கும்.

நெஞ்சுவலி

நுரையீரலில் தொந்தரவு, இதயத்திலுள்ள சதை மற்றும் எலும்பிலுள்ள பிரச்சனை காரணமாக இவ்வலி ஏற்படும். இவ்வலி சாதரணமாகவும் இருக்கலாம். மோசமாகவும் இருக்கலாம். உயிருக்கே கூட ஆபத்தாக அமையும். மூச்சு இருக்கும்போது நெஞ்சு வலி ஏற்படும். நெஞ்சில் வலி என்பது தொற்று காரணமாக ஏற்படும். மேலும் இருமல், ஜுரமும் இருக்கும். நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிக்ச்சைக்கு தயாராக வேண்டும்.

ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியாகுதல்)

இருமும்போது கருஞ்சிவப்பு நிற நுறை, ரத்தம் கலந்த சளி, கட்டி ரத்தம் அல்லது சுத்தமான ரத்தம்கூட வெளியாகும். தொடர் இருமல் காரணமாக இதுபோல் நிகழும் அல்லது மோசமான நுரையீரல் நோய் காரணமாக ரத்தம் வெளியாகும். இருமும்போது ரத்தம் வெளியாகுதல் மூச்சுக்குழல் வியாதியின் ஒரு வகை அறிகுறியாகும்.

சையனோசிஸ்

தோல் நீலமாக அல்லது கருநீலமாகும்போது இது உண்டாகும். குறிப்பாக உதடுகள், நகக்கண்களில் நிறமாற்றம் ஏற்படும்போது, சையனோசிஸ் ஏற்படும். ஏன் இப்படி நிறமாற்றம் ஏற்படுகிறது? ரத்தத்தில் போதியளவு பிராணவாயு கலக்காமல் போவதால் உண்டாகிறது. மோசமான நுரையீரல் வியாதியினால் சையனோசிஸ் ஏற்படுகிறது.

வீக்கம்

கை, கால் மற்றும் கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது நுரையீரல் வியாதியினால்தான். வீக்கம், இதயநோய், மூச்சுவாங்குதல் ஆகியவற்றோடு சேர்ந்து உண்டாகும். பல நேரங்களில் இதயம் நுரையீரல் இவ்விரண்டும் ஒரேமாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும். காரணம் பல பிரச்சனைகள் இதயத்தையும் நுரையீரலையும் தாக்குகின்றன.

புகைபிடிக்காதீர்

நமது உடலை மோசமாக பாதிக்கக்கூடியது புகை பிடிப்பதுதான். நுரையீரல் வியாதிகளான எம்பைசீமா, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை மட்டுமல்ல, நமது உடலில் மற்ற உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது புகை பிடித்தல் பழக்கம். எனவே புகையை தவிர்ப்போமே!

கேள்வி பதில்கள்
நிமோனியா என்றால் என்ன?

நிமோனியா ஒரு கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய். இது நுரையீரலைப் பாதிக்கிறது. பொதுவாக நுரையீரல் நுண் அறைகளில், சுவாசிக்கும் போது காற்று நிரம்பி இருக்கும். ஆனால் நிமோனியாவில் இந்த நுண்ணறைகளில் சளியும் சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து உயிர்வளி உள்ளெடுப்பைத் தடை செய்யும். வைரஸ், நுண்ணுயிரி, காளான் போன்ற பலவற்றால் நிமோனியா உண்டாகிறது.

நிமோனியா எவ்வாறு பரவுகிறது?

பல வழிகளில் நிமோனியா பரவுகிறது:

குழந்தையின் மூக்கு அல்லது தொண்டையில் பொதுவாக இருக்கும் வைரஸ் அல்லது நுண்ணுயிரி நுரையீரலைப் பாதித்தல்.
இருமல் அல்லது தும்மல் மூலம் நோய்பரப்பிகள் பரவலாம்.
இரத்தம் மூலமும் பரவலாம் (குறிப்பாகப் பிறந்த உடன்)
ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளில் நிமோனியாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

காய்ச்சலோடும் இல்லாமலும் இருமல் மற்றும்/அல்லது மூச்சு விடுவதில் சிரமம்.
வேகமான சுவாசம் மற்றும் நெஞ்சுச் சுவர் உள்ளொடுங்குதல் (விரிவதற்குப் பதில்).
கடுமையான பாதிக்கப்பட்ட குழந்தைகளால் உண்ண, குடிக்க இயலாமை; மயக்கம், குறைவெப்பம் அல்லது வலிப்பு ஏற்படலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: