தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!

0

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.

அதைப் படித்து அவற்றை உட்கொண்டு நன்மைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும்.

அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள்.

அயோடின் உணவுகள்

அயோடின் உணவுகள் தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். தைராக்ஸின் உடலில் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ளும். ஆகவே தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த அயோடின் சத்து அன்னாசிப் பழம், அயோடைஸ்டு உப்பு, முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது.

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை உறுதிபடுத்தப்படுகிறது. இத்தகைய ஒமேகா கொழுப்பு அமிலங்கள் பூசணிக்காய், சால்மன், டூனா, வெங்காயம், பச்சை இலைக் காய்கறிகள், சூரியகாந்தி விதை, பூண்டு, எள்ளு மற்றும் வால்நட் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

பால் பொருட்கள்

ஹைப்பர் தைராய்டு பிரச்சனையினால் உடலில் கால்சியத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

எனவே கால்சியம் நிறைந்த உணவுகளான நெய், பால், சீஸ், தயிர் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும் கால்சியம் சத்தை காய்கறிகளின் மூலமும் பெறலாம். இந்த கால்சியம் சத்தானது அத்திப்பழம், பசலைக்கீரை, எள்ளு, முந்திரிப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இதர புரோட்டீன்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், வாழைப்பழத்தை அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கடல் காய்கறிகள்

கடல் காய்கறிகளில் அயோடின் பொதுவாக காணப்படும். அயோடின் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். உடலில் அயோடின் போதுமான அளவில் இல்லாவிட்டால், அது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே கடல் காய்கறியான #கடற்பாசியை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஜிங்க் உணவுகள்

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், டயட்டில் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இத்தகைய ஜிங்க் சத்து நிறைந்த பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்றவற்றுடன் இரும்புச்சத்து நிறைந்த பூசணி விதையையும் சாப்பிடுங்கள். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

செலினியம் உணவுகள்

தைராய்டு குறைபாட்டிற்கு செலினியம் மிகவும் முக்கிய பொருளாகும். இது தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த சத்து தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களை சமநிலையில் தக்க வைக்கும்.

இத்தகைய செலினியம்…

முட்டை, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் போன்றவற்றில் அதிகம் அடங்கியுள்ளது.

இரும்புச்சத்து மற்றும் காப்பர் உணவுகள்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மற்றும் காப்பர் மிகவும் உதவியாக இருக்கும். இந்த கனிமச்சத்துக்கள் தைராய்டின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதில் காப்பர் சத்தானது…

முந்திரி, சூரியகாந்தி விதை, கடல் சிப்பி, நண்டு, செரில்கள், விதைகள் மற்றும் கொக்கோ பொருட்களில் உள்ளது.

இரும்புச்சத்தானது பச்சை இலைக் காய்கறிகள், மாட்டிறைச்சி, கோழி போன்றவற்றில் உள்ளது. உடலால் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு, வைட்டமின் சி அவசியமாகும். எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், தக்காளி, உருளைக்கிழங்கு, பெர்ரி போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.

பெர்ரிப் பழங்கள்

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், தினமும் தங்களது டயட்டில் ஒரு கப் பெர்ரி பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டை ஒரு கப் சாப்பிடுவது நல்லது. இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தைராய்டின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும்.

திணை

திணையில் சையனோஜெனிக் க்ளுக்கோசைடுகள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த உணவுப் பொருள் தைராய்டு சுரப்பியில் உள்ள அதிகப்படியான அயோடினைத் தடுக்கும். மேலும் இந்த திணை நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாத்திரம் அறிந்து பசியாறுவோம்! அவசியம் படியுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்!
Next articleஎச்சரிக்கை பதிவு. ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!