ஆராவரத்தில் ரசிகர்கள்! பிரபல தமிழ் நடிகருக்காக இலங்கை வங்கி செய்த வித்தியாசமான செயல்!

0
291

விஜய் நடிக்கும் சரக்கார் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், கட்அவுட் வைத்து மகிழ்ந்துள்ளது இலங்கை வங்கி.

இலங்கை வங்கியின் பருத்தித்துறை கிளை இந்த அதிரடியாக காரியத்தை செய்து, விஜய் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று, நாட்டின் தன்னிகரற்ற வங்கி தாமேயென்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

பருத்தித்துறையிலுள்ள ஒரேயொரு திரையரங்கில், பிரமாண்ட விஜய் பனர் தொங்க விடப்பட்டுள்ளது. இதற்கான அனுசரணையை இலங்கை வங்கி வழங்கியுள்ளது.

வங்கிகளில் கடன் பெறுவதற்கு அரச வங்கிகள் காட்டும் கறார் நடைமுறைகளால் ஆட்கொல்லி தனியார் நிதி நிறுவனங்களை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், பருத்தித்துறை இலங்கை வங்கியின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அண்மையில் அரசாங்கம் என்ரபிறைஸஸ் சிறிலங்கா என்ற கடன் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. தொழிற்துறை முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட இந்த கடன் திட்டத்தில் இலங்கை வங்கியிலும் கடன் பெறலாம். அந்த திட்டத்தின் கீழ் சினிமா துறையை வளர்த்தெடுக்க இலங்கை வங்கி முயற்சிக்கிறது போல என நெட்டிசன்கள் சிலர் கலாய்த்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: